book

தந்தை பெரியார் சிந்தனைக் களஞ்சியம்

₹500
எழுத்தாளர் :புலவர் த. கோவேந்தன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :தத்துவம்
பக்கங்கள் :688
பதிப்பு :5
Published on :2015
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, புதினம், நாவல்
Out of Stock
Add to Alert List

முடமாகிக் கிடந்த மூத்த  தமிழனைத் தட்டியெழுப்பி,சிந்தனைச் சிறகை விரித்துப் பறப்பதற்குக் கற்றுக் கொடுத்த சுய சிந்தனையாளர் தந்தை பெரியார். மூடநம்பிகை, சாதி, தீண்டாமை, பெண் அடிமை என்று நிறைய எதிரிகள் அவருக்கு. குறிப்பாக, உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற பாகுபாட்டைக் களைய வாழ்நாள் முழுவதும் மிகவும் கடுமையாகப் போராடினார் அவர். நித்தம் நித்தம் போராட்டம். நித்தம் நித்தம் யுத்தம். சீர்திருத்தம் என்கிற சொல்லுக்கு அர்த்தம் பிறந்ததே இங்கு பெரியார் களமிறங்கிய பிறகுதான்! வெண்தாடி வேந்தரின் தீரம் மிக்க இந்த வாழ்க்கை வரலாறு படிக்கப் படிக்கப் பரவசமளிக்கிறது.அவருடைய சிந்தனைகள் புலவர் த. கோவேந்தன் அவர்களால் தொகுக்கப்பட்டு 'தந்தை பெரியார் சிந்தனைக் களஞ்சியம் என்னும் பெயரில் இரு தொகுதிகளாகப் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்துள்ளது