நவீன மருத்துவம் தோன்றுவதற்கு முன்னரே தமிழர்கள் மருத்துவத்தில் சிறந்து விளங்கினார்கள் என்பதை தமிழ் இலக்கியங்கள் மூலமாக அறிய முடிகிறது. இங்கிருந்துதான் மருத்துவக் கலையும் அறிவியல் கலையும் மற்ற நாடுகளுக்கு பரவின என்பதை ஆராய்ச்சியாளர்கள் தக்க சான்றுகளுடன் நிரூபித்து வருகிறார்கள். அதன் காரணமாக சித்த மருத்துவத்தின் சிறப்பு உணரப்பட்டு வருகிறது. சித்த மருத்துவத்தைப் பரப்புவதில் இரண்டு திருமலை நடராசன் அவர்கள் பெரும் பங்காற்றி வருகிறார். சித்த மருத்துவம் பற்றி இருபத்து இரண்டு நூல்களை எழுதியுள்ள ஆசிரியர் மூலிகைக் களஞ்சியம் என்ற நூலை எழுதி சித்த வைத்தியத் துறைக்கு தன்னை அர்பணித்துக் கொண்டிருக்கிறார். மரங்களின் மருத்துவப் பயன்கள் என்ற இந்நூலில் ஆசிரியர் மரங்களின் மருத்துவப் பயன்களையும் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளையும் தெளிவாகக் கூறியுள்ளார்.