book

சித்தர்கள் கண்ட தத்துவங்கள்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.சி. கணேசன்
பதிப்பகம் :கீதாஞ்சலி பிரசுரம்
Publisher :Geethaanjali Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2004
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம்
Out of Stock
Add to Alert List

தமிழகத்தில் எத்தனையோ சித்தர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். பதினேண் சித்தர்கள் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார்கள். இவர்களைத் தவிர நூற்றுக்கணக்கான சித்தர்கள் வாழ்ந்ததற்கு அகச்சான்றுகளும் புறச்சான்றுகளும் நிறைய உள்ளன. மாயவரத்துக்கு  அருகில் சித்தக்காடு என்றொரு இடம் இருக்கிறது. சித்தர்காடு என்பதுதான் சித்தக்காடு என்று மருவி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள்.இங்கே பல சித்தர்கள்  வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. சித்தர்கள் என்பவர்கள் யார் ?சித்திகளை அடைந்தவர்கள் சித்தர்கள். சித்திகள் என்றால் என்ன ?விஞ்ஞான முறைப்படி இயற்கை வதிகளை நாம் கண்டறிந்து இருக்கிறோம். இந்த விதிகளுக்கு உட்படாத நிகழ்ச்சிகள்  பலவும் நடக்கின்றன.இவை எப்படி நடக்கின்றன என்று நமக்குப் புரிவதில்லை. ஆனாலும் நடப்பதைப் பார்க்க முடிகிறது. உணர முடிகிறது.