book

வியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி?

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வே. தமையந்திரன்
பதிப்பகம் :வித்யா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Vidhya Publications
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2005
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Out of Stock
Add to Alert List

பொருளில்லாருக்கு இவ்வுலகில்லை என்பது வள்ளுவர் வாக்கு. அதிலும் வேண்டுமெனில் உலகில் பொருள் இல்லாமல் யாரும் வாழ முடியாது. பொருள் வேண்டுமெனில் ஒவ்வொருவரும் அவரவர் அனுபவம்,பயிற்சி, தகுதி மற்றும் திறைமக்கு ஏற்ப ஏதாவது வேலையில் அல்லது சொந்தத் தொழிலில் ஈடுபட வேண்டியது அவசியம். வியாபரம் என்பது ஒரு தொழில், சொந்தமாக முதலீடு செய்து பொருட்களையும், சேவைகளையும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து  பணம் சம்பாதிப்பது வியாபரம் எனப்படுகிறது. தொழில்  முனைவது என்பது ஒரு தனிப்பண்பு. இந்தப்பண்பு எல்லோரிடமும் ஒரே அளவாகவும் இயல்பாகவும் அமைவதில்லை. ஒருவருக்குத் தொழில் முனைவும் துணிவும், போதிய மூலதனமும் இருந்து அவர் ஏதாவது வியாபாரத்தைத் தொடங்கிவிட்டால் மட்டும் போதாது. தொடங்கிய வியாபாரத்தில் வெற்றிபெற வேண்டியதும் அவசியம். வியாபாரம் தொடங்குவதற்கும், தொடங்கிய வியாபாரத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு அதில் வெற்றி பெறுவதற்கும் உதவும் சில யோசனைகளையும், நுட்பங்களையும், வியாபார்த்தில் வெற்றிபெறுவது எப்படி? என்னும் இந்நூல் விவரிக்கின்றது.