book

பாண்டியநாட்டில் பரமன் திருவிளையாடல்கள்

Pandianaatil Paraman Thiruvilayadalhal

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செவல்குளம்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :111
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184762686
குறிச்சொற்கள் :திருவிளையாடல், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள், சிவன்
Out of Stock
Add to Alert List

பரம்பொருளாகிய சிவபெருமானின் திருவிளையாடல்கள் நிறைய உண்டு. மக்களைக் காத்து அருளிய அந்த விளையாட்டுகளை வைத்து பல நீதிக் கதைகள் வாய் வழியாக சொல்லப்பட்டும், நூல்களாக எழுதப்பட்டும் இருக்கின்றன. சிந்தை நிறைக்கும் சிவனின் அத்தகைய கதைகள், படிப்பதற்கு சுவாரஸ்யத்தையும் சுவையையும் அளிக்கக் கூடியவை; இறைவன் மீது பக்திப் பரவசத்தை ஏற்படுத்துபவை; சமூக நீதியை நிலைநாட்டுபவை; மக்களுக்கு இறைவன் மீதும் அவனுடைய கருணை மீதும் நீங்காத பற்றை ஏற்படுத்தி, சிவ வழிபாட்டில் பக்தர்களை ஆழ்ந்து மூழ்கச் செய்பவை... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அப்படிப்பட்ட முத்தான பதினெட்டு கதைகளை இந்த நூலில் ‘செவல்குளம்’ ஆச்சா தொகுத்துத் தந்திருக்கிறார். இந்தப் பதினெட்டு கதைகளையும் படிக்கப் படிக்க இறைவனின் திருவிளையாடல்களை கண்முன்னே காண்கிற மாதிரியரு பிம்பம் தோன்றும். அதுதான் கதை அமைப்பில் இருக்கும் சிறப்பு. இந்த நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் பல கதைகள் மிகவும் பிரசித்திபெற்றவை. பக்திப் பேருரைகள், சொற்பொழிவுகளில் சொல்லப்பட்டவை. பெரும்பாலானவர்கள் கேட்டறியாத கதைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. முதியவர்கள் தங்கள் பேரன் _ பேத்திகளுக்கும், பெற்றோர்கள், மகன் _ மகளுக்கும், இளைஞர்கள், தம்பி _ தங்கைகளுக்கும் சொல்லவேண்டிய ‘திருவிளையாடல்கள்’ கதைகளின் தொகுப்புதான் இந்த நூல்.