book

மகாபாரத முத்துக்கள்

Mahabharat Muthukkal

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பூவாளூர் ஜெயராமன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :143
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184762679
குறிச்சொற்கள் :கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
Out of Stock
Add to Alert List

இதிகாச _ புராணக் கதைகளில் பிரசித்தி பெற்றது நமது பாரதம். வாழ்வியல் கருத்துகளை லாவகமாகக் கூறும் மகாபாரதத்தின் சாரத்தை அறிந்தவர் பலர்; அறிய நினைப்பவர் சிலர். மகாபாரதத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் நம் சிந்தையைச் சிறக்கச் செய்யும் காட்சிகள் என்பதை புராணத்தைப் புரட்டியவர்கள் உணர்வர். மகாபாரதத்தில் வலம்வரும் பாத்திரப் படைப்பின் பின்னணியைச் சிந்தித்து, அவர்களின் குண நலன்களைச் சுவைபடக் கூறும் நூல்தான் ‘மகாபாரத முத்துக்கள்!’ மகாபாரதத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகளுக்கான பின்னணி என்ன என்பதையும், ஒவ்வொரு கதாபாத்திரமும் படைக்கப்பட்டக் காரணத்தையும் கதை ஓட்டத்தோடு சுவைபடச் சொல்லியிருப்பது இந்த நூலின் சிறப்பு. வில் வித்தையில் அர்ஜுனனைவிட சிறந்தவர் யார்? பன்னிரண்டு கால வனவாசம் செய்த பாண்டவர்கள், ஒருவருட கால அஞ்ஞாத வாசத்தை எப்படி, எங்கு கழித்தார்கள்? என்பது போன்ற சுவாரசிய நிகழ்வுகளோடு, வருணன், சந்தனு மகாராஜாவான கதை, பிரபாசன், பீஷ்மரான கதை, அர்ஜுனன் அரவாணியான கதை... என, பல பூர்விக புராணக் கதைகளையும் நயமான நடையில் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் பூவாளூர் ஜெயராமன். கிருஷ்ணர், தர்மன், பீமன், துரியோதனன், கர்ணன், குந்திதேவி... என ஒவ்வொரு கதாபாத்திரத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வண்ணம், அந்த அந்தக் காட்சிக்கான படங்களை உயிரோவியமாக வரைந்துள்ளார் ஓவியர் சதாசிவம். தலைமுறைகளைத் தாண்டி புராணத்தை விளக்கும் பொக்கிஷ நூல்களில் இதுவும் ஒன்று.