book

இரட்டைக் காப்பியங்கள் காப்பியப் பார்வை

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வ.சுப. மாணிக்கம்
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2010
ISBN :9789380219455
குறிச்சொற்கள் :பொக்கிஷம், கருத்து, சரித்திரம், பழங்கதைகள்
Out of Stock
Add to Alert List

இளங்கோவே! வேங்கை மரநிழலில் ஒருமுலை இழந்த பத்தினியொருத்தி நின்றாள். தேவர்கள் அவள் கணவனொடு வந்து அவளை அழைத்துச் சென்றதைக் கண்ணாரக் கண்டோம்' என்று குன்றக் குறவர்கள் வியந்த செய்தியை அறிவித்தனர். 'கோவலன் சோழர் தலைநகராம் காவிரிப்பூம் பட்டினத்துப் பிறந்த வணிகன். பரத்தைகுல மாதவியோடு கூடி ஆடிப் பொருளையெல்லாம் இழந்தான். மனைவி கண்ணகியோடு காற்சிலம்பு விற்கப் பாண்டியர்தம் மதுரைக்குச் சென்றவன் தீய பொற்கொல்லனைக் கண்ணுற்றான். ஊழ்வினை முற்றியது. சிலம்பு திருடிய கள்வன் என்று பாண்டியனால் கொலைப்பட்டான். கற்புடைக் கண்ணகி அழுதாள்; சினந்தாள; முலையைத் திருகி எறிந்தாள். மதுரை எரிய,மதுரைமாதெய்வம் கண்ணகி முன் தோன்றியது. கோவலன் முற்பிறப்பில் சங்கமனைக் கொன்றான். அத்தீவினையால் இப்பிறப்பில் கொல்லப்பட்டான் என்று காரணம் காட்டிற்று. இதனை வெள்ளியம்பலத்துப் படுத்துக்கிடந்த நான் கேட்டேன் என்று தமிழ்ப்புலவர் சாத்தனார் குறவர் செய்தியை இளங்கோவுக்கு விரித்துரைத்தனர். வரலாற்றை வடித்துணர்ந்த அடிகள் 'சிலப்பதிகாரம் என்னும் ஒரு நூல் யாப்பேன்.