-
எந்த ஒரு பொருளையும் தயாரித்துவிடலாம். ஆனால் அதை சந்தைப்படுத்துவது தனிக்கலை. அதேபோல ஒரு பொருளை சந்தையில் நிலைத்து நிற்கச்செய்யவும் தனி சாமர்த்தியமும் புத்திக்கூர்மையும் தேவை. விற்பனைத் துறையில் (சந்தையில்) போட்டிகளும் பொறாமைகளும் ஏராளம். வளரவிடாமல் நசுக்குவதற்குப் போட்டியாளர்கள் காத்துக்கொண்டிருப்பார்கள். இவர்களுடைய திட்டங்களை மதிநுட்பத்தால் முன்கூட்டியே அறிந்து அவற்றை முறியடித்து வெற்றிவாகை சூடவேண்டும். இந்த ‘மார்க்கெட்டிங் யுத்த’த்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்க வேண்டிய நிர்ப்பந்தமும் கொண்ட துறை இது! வாடிக்கையாளர்களின் நாடித்துடிப்பையும் விற்பனைப் பிரிவின் உயரதிகாரி தெரிந்துவைத்திருக்க வேண்டும். வாங்குபவர்களிடம் அவ்வப்போது ஏற்படும் மனமாற்றத்தை விரல் நுனியில் வைத்துக்கொண்டு காய் நகர்த்தவேண்டும். ‘விற்பனைத் துறையில் வெற்றிக் கிரீடம்’ அணிய விரும்புபவர்களுக்கு, தனது அனுபவங்களையே மையமாக வைத்து இந்த நூலை எழுதியிருக்கிறார் சதீஷ் மேத்தா. போட்டியாளர்களுக்கு எதிராகப் பாதை வகுத்து, தான் வெற்றிபெற்ற விவரங்களை சுவைபடத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர். ‘Marketing to Win’ என்ற தலைப்பில் ‘பியர்ஸன்’ வெளியிட்டிருக்கும் ஆங்கில நூலை எளிமையான தமிழில் அழகாக மொழிபெயர்த்திருக்கிறார் எஸ்.ராமன். விற்பனைத் துறையில் கால்பதித்து உயரத்தை எட்ட விரும்பும் அனைவரும் கட்டாயம் படித்துப் பயன்பெற வேண்டிய நூல் இது.
-
This book Virpanaithuriyil Vetri Greedam is written by Sathish Metha and published by Vikatan Prasuram.
இந்த நூல் விற்பனைத்துறையில் வெற்றிக் கிரீடம், சதீஷ் மேத்தா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Virpanaithuriyil Vetri Greedam, விற்பனைத்துறையில் வெற்றிக் கிரீடம், சதீஷ் மேத்தா, Sathish Metha, Varthagam, வர்த்தகம் , Sathish Metha Varthagam,சதீஷ் மேத்தா வர்த்தகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Sathish Metha books, buy Vikatan Prasuram books online, buy Virpanaithuriyil Vetri Greedam tamil book.
|