| |||||||||||||||||||||||||||||||||||||||
|
![]() |
|
| |||||||||||||||||||||||||||||||||||||||
|
You must be logged in to post a comment.
Jeeva Puthakalayam |
Information/Help |
Customer Care |
Follow us |
About Us Contact Us Terms and Conditions Tamil books blog Link to Us |
Frequently Asked Questions(FAQ) How to buy tamil books online? Tamil books online shopping - Top sellers Free Tamil E-Books for download Tamil books tags Tamil book news Tamil book Reviews Tamil book Release |
Help Desk: Customercare email : Write to us ccare@noolulagam.com Phone : Call us +91-7667-172-172 Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders Give Feedback |
![]() ![]() ![]() ![]() |
![]() |
![]() |
![]() |
ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி!
ஒருவனின் மனைவி மிகவும் உடல் நிலை சரியில்லாமல் படுக்கையில் இருக்கிறாள். சாகும் தருவாயில் அவள் அவனிடம், “நான் உன்னை உயிருக்குயிராக நேசிக்கிறேன்,அதனால் உன்னை விட்டுப் பிரிய எனக்கு விருப்பமே இல்லை. நான் இறந்தபின், நீ யாரையும் கல்யாணம் செய்துக்கொள்ள மாட்டேன் என்று எனக்கு ஒரு சத்தியம் செய்துக் கொடு. அப்படி மீறி நீ யாரையாவது கல்யாணம் செய்துகொண்டால், தினமும் நான் உன் கனவில் வந்து உன்னை தொந்தரவு செய்துகொண்டே இருப்பேன் “, என்று சொல்லிவிட்டு இறந்து விடுகிறாள்.
அவள் இறந்து பல மாதங்களாகியும், அவன் எந்தவொரு பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காமல் இருக்கிறான். ஆனால், திடீரென்று ஒரு பெண்ணைப் பார்த்து காதல்வயப்படுகிறான். காதலும் நிச்சயதார்த்தம் வரைச் செல்கிறது. ஆனால் , அன்று இரவு திடீரென்று இறந்துபோன அவன் மனைவி பேயாக வருகிறாள். அவன் தான் செய்து கொடுத்த சத்தியத்தை மீறியதாக குற்றம் சாட்டுகிறாள். அன்று முதல் ஒவ்வொரு இரவிலும் பேயாக வந்து அவனை இம்சிக்கிறாள். அதுமட்டுமல்லாமல், அவனுடைய காதலியும் அவனும் பேசிகொண்டதை, ஒரு வார்த்தைகூட விடாமல் அப்படியே ஒப்பிக்கிறாள். இதனால், ஓவ்வொரு இரவிலும் அவன் தூங்கமுடியாமல் தவிக்கிறான்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவன் ஒரு நாள், இந்த பேய்க்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டுமென்று அந்த ஊரில் உள்ள ஒரு ஜென் துறவியிடம் சென்று தன் கஷ்டத்தைச் சொல்லி அறிவுரை கேட்கிறான். கதையைக்கேட்ட ஜென் துறவி, “இந்தப் பேய் மிகவும் புத்திசாலியானப் பேய்தான்” என்கிறார். ஆமாம் என்று சொல்லிய அவன், நான் சொல்கிற , செய்கிற அனைத்தையும் எப்படியோ தெரிந்து கொள்கிறது அந்தப் பேய் என்கிறான். அத்துறவியோ புன்னகைத்தபடி, “அப்படிப்பட்ட ஒரு பேயைக் கண்டு நீ பெருமைப்பட வேண்டும்” என்கிறார். பின்னர் அவரே, சரி அடுத்தமுறை அந்தப் பேயைப் பார்க்கும்போது நான் சொல்கிறபடி செய் என்று சொல்லி அவனை அனுப்பி வைக்கிறார்!
அன்று இரவு திரும்பவும் அந்தப் பேய் வருகிறது. அவனும் அதன் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தவனாய், “உன்னைப் போல் ஒரு புத்திசாலியான ஒரு பேயை நான் இதுவரைப் பார்த்ததேயில்லை, அதுமட்டுமில்லாமல் உன்னிடமிருந்து என்னால் எதையுமே மறைக்க முடியவில்லை. ஆனால், நான் கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் நீ விடை சோல்லிவிட்டால், நான் இந்த திருமணத்தையே நிறுத்திவிடுகிறேன், அதன் பின்னர் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாகவே இருந்துவிடுகிறேன்” என்கிறான்.
சரி, என்ன உன் கேள்வி? என்கிறது பேய். உடனே அவன் ஒரு பையிலிருந்து கடலையை கை நிறைய அள்ளி, ” என் கையில் எத்தனை கடலை மணிகள் இருக்கிறது என்று சரியாகச் சொல் பார்க்கலாம்” என்கிறான். அவ்வளவுதான், அந்தக் கேள்வியைக் கேட்டு தலைதெறிக்க ஓடிய பேய், அதன் பின்னர் அவன் வாழ்க்கையில் திரும்ப வரவே இல்லை!
என்ன, கதையைக் கேட்டாச்சா? சரி, இப்போ நாம இந்தப்பதிவோட முக்கியமான செய்திக்கு வருவோம். அதாவது, கதை சொல்வதும் அதை புரிந்து கொள்வதும் ஒரு கலையாம். பெரும்பாலும் மக்கள், கதைகளில் வரும் வார்த்தைகளையும், கதையையும் மட்டுமே புரிந்துகொள்கிறார்களே தவிர, கதையின் அடிப்படைக் கருத்தை (மையக்கருவை) புரிந்துகொள்வதில்லையாம். அது எப்படி என்கிறீர்களா? உதாரணத்துக்கு இக்கதையையே எடுத்துக்கொள்வோம். இக்கதையைக் கேட்ட/படித்த சிலர் என்ன சொன்னார்கள் தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்….
“யாருக்குமே எல்லாம் தெரிவதில்லை. பேய்களுக்கு கூடத்தான். சில வகையில் வேண்டுமானால் நாம் புத்திசாலியாக இருக்கலாம், ஆனால் எல்லா வகையிலும் அல்ல”
“அந்த பேய் ஏன் திரும்ப திரும்ப வந்தது என்றால், எப்படி எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறது இந்தப் பேய் என்று அவன் எப்பொழுதும் ஆச்சரியப்பட்டான். அதனால், அந்தப் பேய் அவனை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. ஆனால், ஒரு நாள் எதிர்த்து நின்று தைரியமாக அவன் கேள்வி கேட்டவுடன் அந்தப் பேய் ஓடிவிட்டது”
“அவனில் ஒரு பகுதிதான் அந்தப் பேயே! அதனால், அவனுக்குத் தெரியாத எதுவும் அந்தப் பேய்க்கு தெரியவில்லை”
” அவனுடைய மனதிலிருந்துதான் அந்த பேய் வருகிறது. அதை உருவாக்கியவனும் அவனேதான். அவனுடைய குற்ற உணர்வுதான் பேயாக வந்து அவனை துன்புறுத்துகிறது”
” நாம் பயப்படுவதால்தான் எதுவுமே நம்மை பயமுறுத்துகிறது. அதைக் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டால் அது மறைந்துவிடுகிறது”
இன்னும் சிலர்…..
“எனக்கு இந்தக் கதையின் முடிவு பிடிக்கவில்லை. நிறைய எதிர்ப்பார்ப்புகளுடன் நான் இந்த கதையை படிக்கத் தொடங்கினேன். கடைசியில் சப்பென்றாகிவிட்டது”
“ஆமாம் , அவன் ஒரு ஜென் துறவியைச் சந்தித்தான் என்று ஏன் அந்தப் பேயால் கண்டுபிடிக்க முடியவில்லை?”
ஒரே கதையை படித்தவர்களின் புரிதல்கள் எத்தனை விதத்தில் இருக்கிறதென்பதை கவனித்தீர்களா? ஆக, கதை ஒன்றுதான். ஆனால் ஒவ்வொருவரின் பார்வைக் கோணத்தில் அது பல்வேறு விதமாக திரிந்து, கடைசியில் கதையின் அடிப்படைக் கருத்து காணாமல் போய்விடுகிறது. இதுபோலத்தான் நம் பயங்களும், வாழ்வியல் தொடர்பான பிரச்சினைகளும்!
உண்மையில் பேய்கள் என்பது நம் பயங்களும், மனதில் ஏற்பட்டு நம்மை அலைக்கழிக்கும் ஒரு வித உளவியல் நோய்களுமே. அத்தகைய பயங்களை உருவாக்கி நம்மை இம்சிப்பதே நம் மூளைதான். அது பயங்களையும் உருவாக்கும், அதேசமயம் வேறு யாரோ ஒருவர் வந்து நம்மை பயமுறுத்துவது போல புலம்பவும் செய்யும்! ஆக, நம் பயங்களுக்கும் துன்பங்களுக்கும் நம் மூளைதான் காரணம் என்று கண்டுபிடித்துவிட்டால் வாழ்க்கையின் போக்கே மாறிவிடும்.
இதைத்தான் சொல்கிறது ஜென் வரலாறு. ஜென் துறவிகள் நம் கற்பனைப் பேய்களைவிட (மனித மனங்கள்!) அதிபுத்திசாலிகளாம். ஆனால், ஜென் துறவிகள் ரத்தமும் சதையுமாக நம் கண்முன்னே இருக்கின்றனர்(பேய்கள் எங்கே இருக்கின்றன?). அவர்கள் சொல்வது என்னவென்றால், பேய்கள் என்பவை நம் எதிர்ப்பார்ப்புகளும் ஆசைகளும்தான். பயப்படுவதற்கும், துன்பப்படுவதற்க்கும் நாம் விரும்பவில்லை என்றால் வேறு ஒருவர் வந்து நம்மை எப்படி துன்புறுத்த முடியும்? சற்று சிந்தியுங்கள்!
அதனால், நாம் உருவாக்கிய பேய்களை (பயம், பற்று, எதிர்ப்பார்ப்பு, ஆசை, போதை….) நாமேதான் அழிக்க வேண்டும். மொத்தத்தில் பேய்கள் நம்மைப் போன்ற உருவமில்லாதவை, வெறும் மனப் பிரம்மைகள்தான்! அவற்றை தூக்கி எறிந்துவிட்டு சென்றோமானால், நலமான வளமான வாழ்வை வாழலாம்!
இந்த ஜென் கதையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நீங்கள் ஜென் கதைகள் வாசித்திருக்கிறீர்களா?
ஜென் கதை அளவில் மிக சிறியது. சில நேரம் அதில் கதை ஏதும் இல்லாத மாதிரி கூட தோன்றும்.. ஆனால் அந்த கதை உங்கள் மனதின் ஓரத்தில் எங்கோ தங்கி விட்டு, பிறகு உங்களுக்கு நடக்கும் எதோ ஒரு அனுபவத்தில் கதையின் அர்த்தம் சட்டென்று புரியும்.
மேலும், இக் கதைகள் அவரவர்க்கும் வெவ்வேறு அர்த்தங்களும் தரக்கூடும்!
எனக்கு மிக பிடித்த 3 ஜென் கதைகள் முதலிலும், அவை எனக்கு என்ன உணர்த்தின என பின்பும் தருகிறேன்..
ஜென் கதை – 1
ஜென் குருவை பார்க்க ஒருவர் வந்தார்.. குரு, “நாம முன்பே பார்த்திருக்கோமா?’ என்றார்… “ஆம்” என்றார் வந்தவர்.. ” அப்படியா? அப்படின்னா வாங்க டீ சாப்பிடலாம்” என்றார் குரு…
அடுத்து இன்னொருவர் வந்தார். அவரிடமும் குரு, “நாம முன்பே பார்த்திருக்கோமா?’ என்றார்… “இல்லை” என்றார் இப்போது வந்தவர்.. ” அப்படியா? அப்படின்னா வாங்க டீ சாப்பிடலாம்” என்றார் குரு…
ஜென் கதை -2
ஒரு டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான்… ஒரு முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது.. அப்போது மல்யுத்த வீரன் டீ கடை காரனை மல்யுத்த சண்டைக்கு அழைத்தான்… அவர்கள் இனத்தில் மல்யுத்த சண்டைக்கு ஒருவன் அழைத்தால் நிச்சயம் ஒப்புக்கொள்ள வேண்டும்; இல்லா விடில் அது பெரும் அவமானம்.. எனவே டீ கடை காரன் ஒப்பு கொண்டான்.
ஆனால் இதில் எப்படி நாம் ஜெயிக்க போகிறோம் என பயந்தான்.. அறிவுரைக்காக ஒரு ஜென் துறவியை நாடினான்..
அவனது கதை முழுதும் கேட்ட அவர், ” சண்டைக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன” என்று கேட்டார். ” 30 நாட்கள்” என்றான் அவன். ” இப்போது நீ என்ன செய்கிறாய்?” என்று பின்பு கேட்டார். ” டீ ஆற்றுகிறேன்” என்றான் அவன்.. ” அதையே தொடர்ந்து செய்” என்றார் அவர்..
ஒரு வாரம் கழித்து வந்தான் டீ கடை காரன்.. ” இன்னும் ஈடுபாடோடு, இன்னும் வேகமாய் டீ ஆற்று” என்றார் ஜென் துறவி..
இரண்டு வாரம் ஆனது.. அப்போதும் அதே அறிவுரை..
போட்டி நாள் அருகில் வந்து விட்டது.. டீ கடை காரன் நடுக்கத்துடன் ஜென் துறவியிடம், ” நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.. “போட்டிக்கு முன் ஒரு டீ சாப்பிடலாம் என நீ அவனை கூப்பிடு” என்றார் துறவி…
மல்யாத வீரன் குறிப்பிட்ட நாளன்று வந்து விட்டான்.. “வா.. முதலில் டீ சாப்பிடு” என்றான் கடை காரன். “சரி” என்று அமர்ந்தான் வீரன்… டீ ஆற்றும் வேகம் கண்டு மிரண்டு போய் விட்டான்.. இதற்கு முன்பும் அவன் டீ ஆற்றுவதை பார்த்திருக்கிறான் இப்போது என்ன ஒரு வேகம்! ஒரு சாதாரண டீ ஆற்றும் விஷயத்திலேயே இவ்வளவு முன்னேற்றம் என்றால், போட்டிக்கு எந்த அளவு தயார் செய்திருப்பான் என எண்ணுகிறான்.. போட்டியே வேண்டாம் என சென்று விடுகிறான்..
ஜென் கதை -3
சிறுவன் ஒருவன் சிறிய குருவி ஒன்றினைப் பிடித்து தனக்கு பின்புறம் கைக்குள் வைத்து மறைத்துக் கொண்டான். ஜென் குருவிடம் அவன், “குருவே, என்னுடைய கைக்குள் வைத்திருக்கும் பறவை உயிருடன் உள்ளதா அல்லது இறந்து விட்டதா?” என்று கேட்டான். குரு “இறந்து விட்டது” என்று கூறினால் தன்னுடைய கையில் இருக்கும் குருவியினை சுதந்திரமாக பறக்க விட்டு விடுவது, அப்படி இல்லாமல் குரு “உயிருடன் உள்ளது” என்று கூறினால் தன்னுடைய கைகளால் குருவியின் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவது என்று மனதிற்குள் முடிவெடுத்தான்.
ஜென் ஆசிரியர், “இந்தக் கேள்விக்கு பதில் உன்னுடைய கைகளில்தான் உள்ளது” என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார்.
கதை – 1 உணர்த்தியது
நமக்கு தெரிந்தவர், தெரியாதவர் இருவரையும் ஒரே விதமாய் நடத்த வேண்டும் என்பதே இந்த கதை சொல்லும் செய்தி என கருதுகிறேன்..
கதை – 2 உணர்த்தியது
அநேகமாய் இந்த கதைக்கு விளக்கம் தேவை இல்லை.. எனினும் சில வரிகள்.. நாம் செய்யும் செயலையே ஈடுபாடோடு செய்யும் போது அந்த செயலும், நாமும் ஒரு உன்னத நிலையை எட்டுகிறோம்.. (ஜென் கதைகளில் டீ சாப்பிடுவது அடிக்கடி நிகழும்.. ஜப்பானில் இன்றைக்கும் டீ சாப்பிடும் திரு விழா என்றே ஒரு விழா உண்டு.. இதில் ஒவ்வொரு மிடக்கும் நிதானமாய், மகிழ்ச்சியாய் அனைவரும் டீ அருந்தி கொண்டாடுவர்.. வாழ்க்கையை இவ்வாறு துளி துளி ஆக enjoy – செய்ய வேண்டும் என்கிறது ஜென் …)
கதை 3 – உணர்த்தியது
அந்த குருவி நம் வாழ்க்கையையும், அந்த சிறுவன் நம்மையும் எனக்கு உணர்த்துகிறது.. நம் வாழ்க்கையை அழிப்பதும், சிறக்க வைப்பதும் நம் கையில் தானே உள்ளது!!
நன்றி : http://veeduthirumbal.blogspot.com/2009/03/blog-post_31.html
மாணவன் ஒருவன் வேலை நிமித்தமாக பக்கத்து ஊருக்குப் பயணப்பட்டான். பயணத்தில் ஒரு ஆறு குறுக்கிட்டது. ஆற்றில் வெள்ளம் சுழித்துச் சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. அகண்ட ஆறு அது. ஆற்றைக் கடக்கத் தயங்கி நின்று கொண்டிருந்தான். ஆற்றின் அக்கறையில் துறவி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
உரத்த குரலில் அவரைக் கூப்பிட்டான் மாணவன், “ஐயா… நான் ஆற்றின் அக்கரைக்கு வருவது எப்படி?’’
குரு சத்தமாகச் சொன்னார்.. மகனே… நீ ஆற்றின் அக்கறையில்தான் இருக்கிறாய்…
விழித்திறன் அற்ற ஒருவன் தன்னுடைய நண்பனைப் பார்க்க பக்கத்து கிராமத்துக்குப் போயிருந்தான். பேசிக் கொண்டே இருந்தார்கள். மாலை வரை பேசிக் கொண்டு இருந்தார்கள். இருட்டத் துவங்கியது. நண்பன் தன்னுடைய விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான்.
“இருட்டி விட்டது. இதற்கு மேல் எங்கே போகிறாய்? காலையில் போய்க் கொள்ளலாம் என்றான்.
எனக்குப் பகல் இரவு எல்லாம் ஒன்றுதான். ஒளி என்ன, இருள் என்ன இரண்டும் ஒன்றுதான் கவலைப்பட வேண்டாம் என்றான் நண்பன்.
எதற்கும் இதை நீ எடுத்துக் கொண்டு போ என்று ஒரு லாந்தர் விளக்கை நண்பனிடம் கொடுத்தான்.
இது எனக்கு எந்த வகையில் பயன்படும்? நான் போய்க் கொள்கிறேன் என்றான்.
உனக்குப் பயன்படவில்லை என்றாலும் இருட்டில் பார்வை உள்ளவர்கள் உன்மீது மோதிக் கொள்ள மாட்டார்கள் இல்லையா? அதற்காக எடுத்துக் கொண்டுபோ என்று வலியக் கொடுத்து அனுப்பினான் நண்பன்.
லாந்தர் விளக்கை எடுத்துக் கொண்டு காட்டு வழியே பார்வையற்றவன் போய்க் கொண்டிருந்தான். பின்னால் இருந்து குரல் கேட்டது..
ஐயா எங்கே போகிறீர்கள்? கையில் விளக்கு இருக்கிறதே… உனக்கும் தெரியவில்லையா என்று ஆச்சரியத்துடன் கேட்டான் பார்வையற்றவன்.
லாந்தரில் பொருத்தப்பட்ட மெழுகுவர்த்தி தீர்ந்து விட்டது சகோதரனே… என்றான் பின் தொடர்ந்து வந்த அந்த வழிப்போக்கன்
ஒரு அரசன் தன நான்கு முக்கிய அமைச்சர்களைக் கூப்பிட்டு அவர்களில் ஒருவரை முதல் அமைச்சராக நியமிக்கவிருப்பதாகவும் அதற்கு அவர் வைக்கும் தேர்வில் தேற வேண்டும் என்றும் கூறினார்.தேர்வு இதுதான் கணித முறையில் அமைக்கப்பட்ட ஒரு பூட்டை யார் விரைவில் திறக்கிறார்களோ அவரே வெற்றியாளர்.மூன்று அமைச்சர்கள் அன்று இரவு முழுவதும் கணிதம்பற்றிய பல புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தனர்.ஒருவர் மட்டும் நிம்மதியாகத் தூங்கிவிட்டார்.மறுநாள் காலை அரசவையில் பூட்டு கொண்டு வரப்பட்டது.பூட்டின் அமைப்பு எல்லோருடைய படபடப்பையும் அதிகரித்தது.ஓலைச்சுவடிகளைக் கொண்டு வந்திருந்த மூன்று அமைச்சர்கள் அவற்றை முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்தார்கள்.ஆனால் அப்பூட்டைத் திறக்கும் வழி அவர்களுக்குத் தெரியவில்லை.இரவில் நன்கு தூங்கிய அமைச்ச மெதுவாக எழுந்து வந்து பூட்டை நன்கு ஆராய்ந்தார்.கூர்ந்து கவனித்ததில் பூட்டு பூட்டப்படவே இல்லை என்பது அவருக்குப் புலனாயிற்று.சாவியே இல்லாமல் எந்த கணித சூத்திரமும் இல்லாமல் பூட்டை எளிதாக அவர் திறக்க, மன்னர் அவரையே முதல் அமைச்சர் ஆக்கினார்.
பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமானால்,முதலில் பிரச்சினை என்னவென்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.பிரச்சினையைப் புரிந்து கொள்ள, மனம் சமன் நிலையில் இருக்க வேண்டும்.
************************
புத்த மத வேதங்களிலுள்ள கருத்துக்களைக் கொண்டு வரையப்பட்டஓவியம் ஒன்றை ஒரு புத்த சந்நியாசி எரித்துக் கொண்டிருந்தார்.அதைப் பார்த்த ஒரு சீடர் அவரிடம் கேட்டார்,’குருவே,என்னே காரியம் செய்கிறீர்கள்?இந்த வேதன்களைத்தானே எப்போதும் எங்களுக்கு பாடமாகச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தீர்கள்.அவைதான் வாழ்வைப் பிரதிபலிப்பவை என்று கூறினீர்கள்?இப்பொது மட்டும் ஏன் அதை எரிக்கிறீர்கள்?’குரு சிரித்துக்கொண்டே சொன்னார்,”நான் வீட்டை அடைந்துவிட்டேன்.இனி எனக்கு வரைபடம் தேவையில்லை.”ஞானம் அடைந்தவர்களுக்கு எந்த வேதமும் தேவையில்லை.
Super…