book

சத்தியமூர்த்தி கடிதங்கள் (பாகம் 2)

Sathyamoorthi Kadithangal(part 2)

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.வி. ராமநாதன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :271
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184762228
குறிச்சொற்கள் :சுதந்திரம், தியாகி, தலைவர்கள், போரட்டம், விஷயங்கள், சரித்திரம்
Out of Stock
Add to Alert List

சத்தியமூர்த்தி கடிதங்கள் நூலின் முதல் பாகத்தைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உங்கள் கரங்களில். சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னரே மறைந்துவிட்ட சத்தியமூர்த்தியின் அரசியலில் சுதந்திர வேட்கையே முக்கியமாக இருந்தது. இந்தப் பின்னணியில், இந்த நூலில் இடம்பெற்றுள்ள கடிதங்களைப் படித்தால் சுதந்திரத்துக்கு முன் பாரதத் தலைவர்கள் ஒட்டுமொத்தமாகப் பட்ட கஷ்டத்தையும் அந்தக் காலகட்டத்தில் நடந்த சில முக்கிய வரலாறுகளையும் உணர்ந்து இன்றைக்கு நாம் அடைந்துள்ள சுதந்திர பொக்கிஷத்தை மனதிலும் போற்றலாம்; அதைத் தக்கவைத்துக்கொள்ளவும் பாடுபடலாம். பிறருக்கு சத்தியமூர்த்தி எழுதிய கடிதங்கள், அவருக்குப் பிறர் எழுதிய கடிதங்கள், பத்திரிகைக் கட்டுரைகள், தந்திகள் ஆகியவை இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன. வெறும் அரசியலை மட்டுமே கடிதங்களில் எழுதிக்கொண்டிருக்காமல் குடும்பங்களைப் பற்றியும் அரசியல் அல்லாத மற்ற விஷயங்களையும் பரஸ்பரம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள். தன் மனைவியும் மகள் லட்சுமியும் விசாரித்ததாக சத்தியமூர்த்தியும் எழுதியிருக்கிறார். காந்திஜி போன்றவர்களும் லட்சுமியைப் பற்றியும் சத்தியமூர்த்தியின் மனைவியைப் பற்றியும் விசாரித்திருக்கின்றனர். ஒரு குடும்பப் பாங்கான சூழ்நிலையில் அந்தத் தலைவர்கள் அரசியலை நடத்திக்காட்டியதை நாம் பார்க்க முடிகிறது. காந்திஜியே ஆனாலும் தன் மனதுக்கு சரி என்று பட்டதை, அவருடைய கருத்துக்கு மாறாக இருந்தாலும் தன் கடிதங்களில் சுட்டிக்காட்டும் தைரியம் சத்தியமூர்த்திக்கு இருந்தது. காந்திஜியும் அதைப் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார். தலைவர்களின் பெருந்தன்மை கடிதங்களில் பிரதிபலிக்கின்றன. சத்தியமூர்த்தி வாழ்ந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட அபூர்வமான சில படங்கள் _ காந்திஜி தன் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தின் படம் உட்பட _ இந்த நூலில் இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு. பியர்ஸன் வெளியிட்ட சத்தியமூர்த்தி கடிதங்கள் பாகம்_2 ஆங்கில நூலின் தமிழாக்கம் இது. கே.வி.ராமநாதன் தொகுத்திருக்கும் இந்தக் கடிதங்களை முதல் பாகத்தைப் போலவே அற்புதமாக மொழிபெயர்த்திருக்கிறார் சாருகேசி. ஏற்கெனவே முதல் பாகத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல, அந்த நூலைப் படித்தவுடனேயே டைம் மிஷினில் பின்னோக்கிப் பயணித்த உணர்வு வந்திருக்குமே! மீண்டும் ஒரு முறை அந்த வாய்ப்பு இந்த நூலின் மூலமும் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். இந்த இரண்டாம் பாகத்தை மட்டும் படித்தாலும் உங்களை மகிழ்விக்கும் என்பதும் நிச்சயம்.