book

நீதியின் கொலை: ராஜன் பிள்ளையின் கதை

Needhiyin Kolai: Rajan Pillaiyin Kathai

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜே. ராஜ்மோகன் பிள்ளை, கே. கோவிந்தன் குட்டி
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184935639
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், வழக்கு
Out of Stock
Add to Alert List

ராஜன் பிள்ளை... பிரிட்டானியா கம்பெனியின் முதல் இந்திய சேர்மன்... ‘பிஸ்கட் கிங்’ என உலகத்தோரால் அழைக்கப்படும் அளவுக்கு உயர்ந்தவர். கோகோ கோலாவை மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டுவர முதலில் முயன்றவர்... சாப்பிட்ட தொகைக்கு மேல் டிப்ஸ் கொடுக்கக்கூடியவர். ஒரு திருமணத்துக்கு அவர் தரும் பரிசு, திருமணச் செலவைவிட விலை கூடியதாக இருக்கும்!

மேலே சொன்ன அடையாளங்களில் ஏதாவது ஒன்றாக நம் நினைவில் நிலைத்திருக்க வேண்டியவர். ஆனால், கெடுபிடி மிகுந்த சிங்கப்பூரில் நியாயமற்ற முறையில் நடந்த வழக்கில் கடும் தண்டனை விதிக்கப்பட்டவர்... அடைக்கலம் தேடிவந்த இந்தியாவில் நீதித்துறையால் கொல்லப்பட்டவர்... சிறையில் உரிய சிகிச்சை கிடைக்காமல் இறந்து போனவர் என்று நினைவில் கொள்ளும் அளவுக்கு அவருடைய வாழ்க்கை சிதைந்துவிட்டது.

ராஜன் பிள்ளையின் மரணத்துக்கு யார் காரணம்?

முந்திரி வியாபாரம் ஒருவரை உச்சத்துக்கும் தூக்கிவிடும், அப்படியே அதல பாதாளத்திலும் தள்ளிவிடும் என்ற விதி காரணமா? அவருடைய அம்மா சொல்வது போல், சனி திசை அவரை ஆட்டி அடக்கிவிட்டதா? மனைவி சந்தேகப்படுவதுபோல், வர்த்தக எதிரிகள் அவரைக் கொன்று-விட்டனரா? அரசியல் சதுரங்கத்தில் வெட்டப்பட்ட பலிகடாவா? வெளியுலகுக்குக் கடைசி வரை அவர் சொல்லாமல் இருந்த கல்லீரல் நோய் முற்றி இறந்தாரா? ராஜன் பிள்ளை மரணமடைந்துவிட்டார். 

ஆனால், அவரது மறைவைச் சுற்றி எழுப்பப்படும் கேள்விகளுக்கு மரணம் உண்டா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தேடுகிறார் அவரது சகோதரர் ராஜ்மோகன் பிள்ளை. இந்தப் புத்தகம் ஆங்கிலம், மலையாளம், குஜராத்தி ஆகிய மொழிகளில் வெளிவந்துள்ளது. இவரது வாழ்க்கைக் கதை ஐகான் எண்டர்டெய்ண்மெண்ட் மூலம் திரைப்படமாக விரைவில் வெளிவரப் போகிறது.