| |||||||||||||||||||||||||||||||||||||||
|
![]() |
|
| |||||||||||||||||||||||||||||||||||||||
|
You must be logged in to post a comment.
Jeeva Puthakalayam |
Information/Help |
Customer Care |
Follow us |
About Us Contact Us Terms and Conditions Tamil books blog Link to Us |
Frequently Asked Questions(FAQ) How to buy tamil books online? Tamil books online shopping - Top sellers Free Tamil E-Books for download Tamil books tags Tamil book news Tamil book Reviews Tamil book Release |
Help Desk: Customercare email : Write to us ccare@noolulagam.com Phone : Call us +91-7667-172-172 Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders Give Feedback |
![]() ![]() ![]() ![]() |
![]() |
![]() |
![]() |
மனஅழுத்தத்திற்கு மருந்தாகும் கவா கவா பானம்
பசிபிக் தீவுகளில் இயற்கையாக காணப்படும் கவா கவா தாவரம் அங்கு வாழும் பழங்குடியின மக்களின் சடங்கு சம்பிரதாயங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தென் பசுபிக் நாடுகளான பிஜி, ஹவாய், டோங்கா, நியூகினியா உள்ளிட்ட தீவுகளில் இது மருந்துப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இத்தாவரத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பானம் திருமணம், பிறப்பு, மரணம் மற்றும் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பானமாக பருகுகின்றனர்.இந்த கவா கவா பானத்தை குடிப்பவர்கள் கடவுளுக்கு சமமாக கருதப்படுகின்றனர்.
மருத்துவ குணம்
1886 ஆம் ஆண்டில் இருந்து இதன் மருத்துவ குணம் உலகிற்கு தெரியவந்தது.இத்தாவரத்தின் வேர் நரம்பு மண்டல நோய்களை போக்கும், தசை நோவுகளை குணப்படுத்தும். மருத்துவ குணம் நிறைந்த இந்த தாவரம், அமெரிக்கா, மற்றும் ஆஸ்திரோலியாவில் மருந்திற்காக பயிரிடப்படுகிறது. சதைப்பற்றுடைய தண்டும், இதய வடிவிலான இலைகளையும் கொண்ட இத்தாவரம் என்றும் பசுமையுடன் இருக்கும். இத்தாவரத்தின் தண்டின் அடிப்பகுதியும், வேரும் மருத்துவ குணம் உடையவை.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
கவா கவா தாவரத்தின் வேரில் காணப்படும் கவாலோக்டோன்கள், கருவய்ன், அல்கலாய்டு பிப்பெரிடைன், பைபர் மெதி சிடிசைன், ஆகியவை மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாக உள்ளன.
உடல் வலுவேற்றும்
வேரில் இருக்கும் வேதிப்பொருட்கள் ஊக்குவியாகவும், வலுவேற்றியாகவும், செயல்பட வைக்கும். இது அதீத படபடப்பு மற்றும் கவலைகளைப் போக்கும். இது வலி போக்குவி. நன்றாக தூக்கத்தை தூண்டும். சிறுநீர்ப்பை கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.
மனஅழுத்த மருந்து
தென் கடல் தீவுகளில் மன அமைதி மற்றும் உணர்ச்சி தூண்டும் பொருளாக கவா கவா மருந்து பயன்படுத்தப்படுகிறது. இது அதிக அளவில் உட்கொள்ளப்படும் போது நன்னிலை உணர்வினை தருகிறது. இதனால் பால் உணர்வு தூண்டுவியாக கருதப்படுகிறது. இதில் காணப்படும் கவாலேக்டேக்டோன்கள் எனப்படும் வேதிப்பொருட்கள் மைய நரம்பு மண்டல அழுத்தத்தினை குறைப்பதுடன் வலிப்புக்கு எதிராக செயல்படுகின்றன.
கவாகவா மருந்து மன அழுத்தத்தை போக்குகிறது. இது மயக்கம் அளிப்பதில்லை. இருப்பினும், தசை இருக்கம் மற்றும் மன கிளர்ச்சி அழுத்தங்களை குணப்படுத்த உதவுகிறது.
தோல் வறட்சி நீங்கும்
இந்த கவா கவா மருந்தை வாராத்திற்கு மூன்று முதல் நான்கு நாட்கள் உட்கொண்டால் மது குடித்து ஈரல் கெட்டுப்போனவர்களுக்கு குணம் தெரியும் என்கின்றனர் மருத்துவர்கள். தோல் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது சிறந்த மருந்தாகும். இந்த மருந்து வாய்ப்புண், மற்றும் பல்வலி ஆகியவற்றில் கொப்பளிப்பாகப் பயன்படுகிறது.
I like very much of this medicine…How can i get this kava kava…pls send me about the deatail…