book

காதல் கல்வெட்டுகள்

Kaathal Kalvettukal

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுரேஷ் - பாலா
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :167
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184761986
குறிச்சொற்கள் :காதல், கற்பனை, சிந்தனை, கனவு
Out of Stock
Add to Alert List

கல் தோன்றிய காலத்துக்கு முன்பே, காதல் தோன்றிவிட்டது என்பார்கள். காதல்தான் இந்த உலகத்தை இயங்கச் செய்கிறது. காற்று நுழையாத தேசத்திலும்கூட காதல் நுழைந்துவிடுகிறது. அந்த சக்தி காதலுக்கு மட்டுமே உண்டு. காதல் என்பது வெறும் உடல் சம்பந்தப்பட்டது அல்ல; மனதால் பிணைக்கப் பட்டது. அப்படி, தங்கள் காதலால் வாழ்க்கையில் இணைந்த பல காதல் ஜோடிகளின் வாழ்க்கையை, சிலிர்ப்பூட்டும் வகையில் எழுதியிருக்கிறார்கள் நூலாசிரியர்கள் சுரேஷ்_பாலா. ஆடு மேய்க்கும் பெண்ணை அரசன் மணந்துகொள்வது, காதலுக்காக தன் கற்பைக் காக்க விஷம் அருந்தி உயிரை விடுவது, அந்தப்புர பணிப்பெண்ணை அரியாசனத்தில் அமர்த்தி ஆட்சிபுரிய வைப்பது, அரசருக்குப் பயந்து இளவரசனும் காதலியும் துப்பாக்கியால் தங்களை மாய்த்துக் கொள்வது, காதலுக்காக துறவி வாழ்க்கை வாழ்ந்து அன்பு பாராட்டுவது... இப்படி, உருக்கமான காதல் வாழ்க்கை, நூல் முழுக்க ததும்பிக் கிடக்கிறது. இதில், லெனின், ஹிட்லர், முஸோலினி போன்றோரின் காதல் வாழ்க்கை இதயத்தை ஈரப்படுத்துகிறது. காதலை வயதாலோ, அந்தஸ்தாலோ, மதத்தாலோ, தேசத்தாலோ, மொழியாலோ, கலாசாரத்தாலோ பிரிக்க முடியாது என்பதற்கு இந்த ‘காதல் கல்வெட்டுகள்’தான் சாட்சி! ‘அவள் விகடன்’ இதழில் தொடராக வெளியானபோதே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த ‘காதல் கல்வெட்டுகள்’ இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில். இது வாசகர்களுக்கு திகட்டாத அமுதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.