book

சிப்பத்தில் கட்டிய கடல்

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உமா மோகன்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2020
ISBN :9788194417385
Add to Cart

எளிமையே ஆகப்பெரும் சிரமத்தை தரும். ஆனால் அந்த சிரமம் உமா மோகனுக்கு இல்லை என்பதை இவரின் சில சிறந்த கவிதைகள் உணர்த்துகின்றன. அக உணர்ச்சிகளை எளிய ஆழமான கவிதைகளாக மாற்றுவதிலும் அவரின் ஆளுமை வெளிப்படுகிறது. சங்கக் கவிதை போல ஒரு ஒற்றைக் காட்சியைக் காட்டிவிட்டு சத்தமில்லாமல் சென்றுவிடுகிறார். பிறகு அதன்மூலம் நீங்கள்தான் உங்கள் கவிதையை எழுதிக்கொள்ள வேண்டும். இதன்மூலம் வாசகனை சஹிர்தய நிலைக்கு உயர்த்துகிறார். ’பொட்டு மூக்குத்திபோலப் பூத்திருக்கும்வயலெட் பூவுக்கு ஏற்ற வடிவிலில்லைஅதன் இலைகள்இப்படித்தான் நடந்துவிடுகிறதுபலநேரம்’ பாருங்கள். அவ்வளவுதான் முடிந்துவிட்டது கவிதை. இது பூவையும் இலையையும் பற்றியதா என்ன. யாரை பற்றியது. எந்த உறவைப் பற்றியது. ஆர்ப்பாட்டம் இல்லை. மதர்த்த சொற்கள் இல்லை. இருண்மை இல்லை. எந்த படாடோபமும் இல்லை. ஆனால் சொல்லாமல் சொல்லி ஒன்றை உணர்த்திவிடுகிறதே. - ரவிசுப்பிரமணியன்