book

சூப்பர் சக்சஸ்

Super Sixes

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேங்கடம்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :192
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788184761931
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, வழிமுறை, நிஜம்
Out of Stock
Add to Alert List

‘உழைத்தால் முன்னேறலாம்’ என்பது பொது விதி. ஆனால், உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையைத் தொடங்கிய அத்தனைபேரும் பெரிய செல்வந்தர்களாக உயர முடிந்ததில்லை! அதேபோல, செல்வந்தர்களாக உயர்ந்தவர்கள் அத்தனைபேரும் கடும் உழைப்பை மேற்கொண்டவர்கள் என்று சொல்லவும் முடியாது! அப்படியானால், ஒரு சாமானியன் எப்படித்தான் செல்வந்தன் ஆவது? ‘உழைப்பு மட்டும் போதாது. உங்கள் சிந்தனை புதிதாக இருக்க வேண்டும். உங்கள் திறமைக்கு உரிய மதிப்பை உயர்த்திக் கொள்ள வேண்டும். செய்யும் தொழிலை ரசித்துச் செய்ய வேண்டும். முதலீடு இல்லாமல் மற்றவரை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அரசு அதிகாரிகளையும், கடைநிலை ஊழியர்களையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. தோல்வி வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் தொழிலை எந்த ஊரில் தொடங்க வேண்டும் என்பதை ஆராய வேண்டும்...’ இப்படி, சாமானியர்களும் செல்வந்தர்களாக உயரமுடியும் என்பதற்கு வெற்றி பெறும் வழிகளை இந்நூலில் சொல்கிறார் வேங்கடம். ‘நான் ஒரு செல்வந்தனுக்கு மகனாகப் பிறந்திருந்தால்... என் தந்தை, எனக்கு தொழில் அமைத்துக் கொடுத்து தூக்கிவிட்டிருந்தால்... குடும்பச் சுமையும் கஷ்டங்களும் இல்லாதிருந்தால்... அவனிடம் இருந்த திறமையும் அறிவும் எனக்கு இருந்திருந்தால்... இப்படிப் புலம்பும் ஒரு சாதாரண மனிதன், பெரும் செல்வந்தராக ஆக முடியாது!’ என்று சொல்லும் நூலாசிரியர், சூழ்நிலைகளை அறிந்து, நமது இயற்கை குணத்தைப் பயன்படுத்த வேண்டிய முறைகளையும் சொல்லி, வெற்றி பெறும் வழிகளையும் திறந்து காட்டுகிறார். பரம்பரைச் சொத்தோ, கல்வியோகூட இல்லாமல், சுய சம்பாத்தியத்தால் முன்னேறிய உலகப் பணக்காரர்கள் கடைப்பிடித்த வழிமுறைகளை, நிஜக் கதைகள் மூலம் சுவையாக விவரிக்கிறார். இப்படி, நூல் முழுக்க தான் பார்த்த, தான் சந்தித்த, தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் உதாரணமாகக் காட்டி, எட்டாத உயரத்தைத் தொட்டுவிடக் கூடிய வழிமுறைகளைச் சொல்கிறார் நூலாசிரியர்.