book

சர்வைவா

₹210+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அதிஷா
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :247
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789388104333
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cart

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல' என்பதற்கேற்ப, புதிய புதிய மாற்றங்கள்தாம் பழைய பூமியை இன்னும் உயிர்ப்புடன் வைத்துள்ளன. கற்களை உரசி ஆதி மனிதன் கண்டுபிடித்த நெருப்பில் இருந்து தொடங்கிய புதிய கண்டுபிடிப்பு தாகம் மனித இனத்துக்கு இன்னும் தணியவே இல்லை. அப்படி மனிதன் கண்டுபிடித்த மின்சாரமும் தகவல் தொழில்நுட்பமும் பூமியின் முகத்தையே மாற்றின. அயல் கிரக ஆராய்ச்சிகள், நானோ, ரோபோ என மனிதனின் தொழில்நுட்பத் தேடல்கள் பல வகைகளில் பல தளங்களில் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இப்போது உலக நாடுகள் எல்லாம் பல துறைகளில் பயன்படுத்த, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தீவிரம் காட்டிக்கொண்டிருக்கின்றன. புதிய புதிய தொழில்நுட்பங்கள் பற்றி ‘சர்வைவா’ எனும் தலைப்பில் ஆனந்த விகடனில் டெக்னோ தொடர் கட்டுரைகள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன. அவற்றின் தொகுப்பு நூல் இது! ‘தொழில்நுட்பங்கள் மனிதனைக் கடவுள்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றன. கடவுளைப்போன்ற சக்திகளை நாம் பெறத்தொடங்கியிருக்கிறோம். அப்படிப்பட்ட சக்தியை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்யப்போகிறோம் என்கிற கேள்வியில்தான் இருக்கிறது நம் எதிர்காலம்' என்று நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பதைப்போல, மாற்றங்களை ஏற்றுக்கொள்வது அவசியம் என்றாலும் அந்த மாற்றங்களால் மனித குலம் செழிக்கவேண்டும், பூமியில் அமைதி பூக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!