book

அறிந்தும் அறியாமலும்

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஞாநி
பதிப்பகம் :ஞான பாநு பதிப்பகம்
Publisher :Gnyana Bhanu Pathippagam
புத்தக வகை :இல்லறம்
பக்கங்கள் :224
பதிப்பு :5
Published on :2009
குறிச்சொற்கள் :இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, செக்ஸ், அந்தரங்கம்
Add to Cart

செக்ஸைப் பற்றிக் குழந்தைக்கு எப்போது சொல்லாம் நம் மனதில் ஒரு நெருடலும், பயமும் தயக்கமும் தோன்றுவதற்கு என்ன காரணம்? செக்ஸ் என்பதற்கு நம் மனதில் வைத்திருக்கும் தவறான அர்த்தம்தான்!  செக்ஸ் என்றதும், ஆண் - பெண் உடல் உறவு கொள்ளும் பிம்பம்தான் நம் மனதில் தோன்றுகிறது.

ஆனால், செக்ஸ் என்பது பால் அடையாளம்.  தான் யார் என்பதை ஒவ்வொரு மனிதரும் உணரச் செய்யும் அம்சங்களில் ஒன்று. நம் உடலைப் பற்றி வெட்கப்படவோ, அவமானப்படவோ எதுவும் இல்லை. நம் செய்கைகளில் தான் அவமானமோ பெருமையோ இருக்க முடியும். செயலில் இருக்க வேண்டிய அவமான உணர்ச்சியை உடல் உறுப்பின் மீதே ஏற்றி வைத்து விட்டோம். அதனால்தான் அப்பா லஞ்சம் வாங்குவது அம்மாவுக்கு அவமானமாக இல்லை.; குழந்தை ஜட்டி போடாத்து அவமானமாக இருக்கிறது!