book

ஒரு சொல் கேளீர்

₹225+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அரவிந்தன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :191
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789389820119
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cart

சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை. கேட்பவரை, மட்டுமல்ல கேட்க விரும்பாதவரையும், தன் வசப்படுத்த வைப்பதே சொல்லாகும்.இந்த சொற்கள் என்னசெய்யும்? சில சொற்கள் நம்மை வாழ வைக்கும். சில வீழ வைக்கும். சில அழ வைக்கும். கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. 'நெல்லைக் கொட்டினால் அள்ளிட முடியும். சொல்லைக் கொட்டினால் அள்ள முடியாது'. ஆனாலும் மனிதர்கள் ஏதோ சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள், அதன் மதிப்பினை உணராமல். அதனால்தான் வள்ளுவர் சொல்லில் பயனிலாச் சொல்லை சொல்லக் கூடாது என்கிறார்.'கண்டேன் கற்பினுக்கணியினை' என்று தன் சொல்லால் சீதையின் பெருமையை உணரச் செய்த அனுமனை சொல்லின் செல்வன் என்று கம்பன் அழைக்கிறான். பசு என்பதும், மாடு என்பதும் ஒரே விலங்கைத் தான் உணர்த்தும் சொல் தான் எனினும் புரியப் படுவதென்னவோ வேறுபட்டுத் தான். சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லாமல் இருக்கும் சொற்கள் பயனற்றவை. சொல்லக் கூடாத இடத்தில் சொல்லும் சொற்களும் அப்படியே. 'ரெண்டு அடி கூட அடிச்சிருக்கலாம்.அதைக் கூட தாங்கிடுவேன்.ஆனா இந்த வார்த்தைகள் தான் வலிக்குது' என்று சொல்வதைக் கேட்டு இருக்கிறோம். கடும்சொற்களால் பிரிந்த குடும்பங்கள் பல. சொல்லின் வலி தாங்காமல் இழந்த நட்புகள், உறவுகள் பலரின் வாழ்வில் உண்டு. பிரியமானவர்களின் அலட்சிய சொற்களே மனதில் தீராத வலியை ஏற்படுத்தி விடுகிறது. இந்த சொற்களைக் கீழே கொட்டிய கடுகு போல திரும்ப பெறவே முடியாது.எனவே வார்த்தைகளில் கவனம் வைத்தால் மட்டுமே வாழ்வு வளமாகும்.