book

பல்லவ பீடம்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாண்டில்யன்
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :201
பதிப்பு :8
Published on :2017
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

முன்னுரை 'பல்லவ பீடம்' என்ற இந்த நவீனம் கி.பி.250 லிருந்து 300-க்குள் அரசாண்ட ஆதிபல்லவர்களின் சரித்திரத்தை நிலைக்களனாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. பல்லவபுரி என்ற பல்லாரியில் அரசாண்ட பல்லவ மன்னன் பப்பதேவன் குமாரனான சிவஸ்கந்தவர்மன், தமிழ்நாட்டில் தலைகாட்டத் தொடங்கிய களப்பிரர்களை எதிர்த்து காஞ்சியைக் காப்பாற்றிய நிகழ்ச்சி கருவூலமாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. இவன் யுவராஜாவானாலும் தன்னை யுவமகாராஜா என்று அழைத்துக் கொண்டதிலிருந்து தந்தை இருக்கையிலேயே தனியரசனாக காஞ்சியை அரசாண்டான் என்று சரித்திரம் கூறுகிறது. மயிதவோலு பட்டயம், ஹிரஹத பட்டயம் ஆகிய பிராகிருத பட்டயங்களில் சிவஸ்கந்தவர்மனைப் பற்றிய விவரங்கள் காணப்படுகின்றன. இவற்றில் கண்ட நிகழ்ச்சிகளைக் கொண்டு ஒரு பல்லவ பீடத்தையும் கற்பனை செய்து இந்தக் கதையை எழுதியிருக் கிறேன். ஆதிபல்லவரின் சூழ்நிலையை அப்படியே விளக்கும்படி இந்தக் கதை புனையப்பட்டிருக்கிறது.
“சாவி" பத்திரிகையில் இந்தக் கதை பிரசுரமான காலத்தில் தமிழ்மக்கள் அளித்த பேராதரவை புத்தக வடிவில் வந்திருக்கும் இந்த நூலுக்கும் அளிப்பார்களென்று நம்புகிறேன்.
இதைத் தொடர்கதையாகப் பிரசுரித்த 'சாவி' ஆசிரியர் அவர்களுக்கும், இப்பொழுது புத்தக வடிவில் கொண்டு வந்திருக்கும் பாரதி பதிப்பகத்தார்க்கும் எனது நன்றி உரித்தாகும்.