book

விலகும் திரைகள்

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரேம்
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789387333611
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cart

அதிர்வெடி போட்டு ஆபிதீனை அடையாளம் காட்டிய பிரேமைச் சேர்க்காமல் ஆபிதீன் பக்கங்கள் அழகு பெறுவதாவது..! பிரேமின் தீராநதி கட்டுரையிலிருந்து கொஞ்சம் பதிவிடுகிறேன் –  அவருக்கு நன்றாகவே பரிகாசம் வரும் என்று காட்ட.  (‘இணையத்தில் எழுதுவதெல்லாம் வேடிக்கையானது’  என்று என்னிடம் பிரேம் சொன்னது பரிகாசத்தில் சேராது).   ‘கண்ணகி அறுத்து எறிந்த ஒற்றைமுலைதான் மணிமேகலையின் கையில் அட்சயபாத்திரமாக மாறியது’ என்று அற்புதமாக பிரேம் எழுதியிருந்ததாக துபாயில் சொன்ன ஜெயமோகன்,  அந்த சொல்புதிது கட்டுரையை தான் தமிழில் மொழிபெயர்க்கவா? என்று பிரேமிடம் கேட்டதாகச் சொல்லி கூட்டத்தைக் கலகலக்க வைத்தார் . ஆமாம், பிரேமின் எழுத்து அப்படித்தான் .  ஜமாலனின் எழுத்தை வாசிப்பதுபோல தோலை உரித்துத்தான் சுவைக்க வேண்டும். ஆனால் , பிரேம் எழுதிய இந்தப் பகுதி மட்டும் உரித்த வாழைப்பழம். பகடி அறியாத  எனக்கே பதமாக இருந்ததென்றால் பார்த்துகொள்ளுங்களேன். உங்களுக்கும் சிரமம் இருக்காது என்றே நினைக்கிறேன். ஒரே ஒரு கண்டிசன் –  வாயைத் திறக்க வேண்டும், வீரபாண்டிய கட்டபொம்மன் போல. சூப்பர் போனஸ் பதிவின் அடியில் இருக்கிறது. வீடியோ. அவசியம் பாருங்கள். நன்றி