-
இயற்பியல் துறையில் 1951 முதல் 2000 வரை நோபல் பரிசு வென்ற விஞ்ஞானிகளை இந்த நூல் அறிமுகம் செய்கிறது. பெருமை மிகுந்த இந்தப் பரிசைப் பெறுவதற்கான அந்த உன்னதக் கண்டுபிடிப்பு என்ன என்பதையும், அது கண்டுபிடிக்கப்பட்ட விதத்தையும் சுவாரசியமாக விவரிக்கிறது. ஏற்கெனவே, 1901 முதல் 1950 வரை இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளின் வாழ்க்கைச் சம்பவங்கள், ‘நோபல் வெற்றியாளர்கள்’ என்ற பெயரில் விகடன் பிரசுரமாக வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது. அதன் இரண்டாவது பகுதி இந்த நூல். விஞ்ஞானிகளின் பிறப்பு _ இறப்பு குறித்த செய்திகள், ஆய்வுக்கூடங்கள், கண்டுபிடிப்புகளின் அரிய படங்கள் ஆகியவையும் அடங்கிய இந்த நூல், இயற்பியலில் ஆர்வம் உள்வர்களுக்கு மட்டுமல்லாமல் ஓர் எளிய வாசகனுக்கும் பயன்படும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் எப்போதும் சமூக நலனைக் கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டும்... ஈகோ, பொறாமை போன்ற குணங்கள் இல்லாமல் விஞ்ஞானிகள் கூட்டாகப் பணிபுரிய வேண்டும் என்பது போன்ற பல நல்ல விஷயங்களையும் போகிற போக்கில் பொருத்தமாகச் சொல்லிச் செல்கிறார் நூலாசிரியர் கொரட்டூர் கே.என்.ஸ்ரீனிவாஸ். மனிதனாகப் பிறக்கும் ஒவ்வொருவரும், சமூகத்துக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு மரக் கன்றையாவது நடுவது அவசியம் என்று சொல்வார்கள். ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பு என்பது, அதுவும் நோபல் பரிசு போன்ற கவுரமான பரிசு பெறும் அளவுக்கான விஞ்ஞானக் கண்டுபிடிப்பானது, இந்த உலகை ஒட்டுமொத்தமாக மாற்றி அமைக்கும் சக்தி கொண்டது. இந்த நூலில் இடம்பெற்ற விஞ்ஞானிகளின் வாழ்க்கைச் சம்பவங்கள், ஒவ்வொரு மனிதரும் அதுபோன்ற ஒன்றை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என்ற உத்வேகத்தை மாணவச் செல்வங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஊட்டும்.
-
This book Noble Vetriyalargal (part 2) is written by K.N.Srinivas and published by Vikatan Prasuram.
இந்த நூல் நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 2), கே.என். ஸ்ரீனிவாஸ் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Noble Vetriyalargal (part 2), நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 2), கே.என். ஸ்ரீனிவாஸ், K.N.Srinivas, Aariviyal, அறிவியல் , K.N.Srinivas Aariviyal,கே.என். ஸ்ரீனிவாஸ் அறிவியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy K.N.Srinivas books, buy Vikatan Prasuram books online, buy Noble Vetriyalargal (part 2) tamil book.
|