book

முதலில் ஓர் இந்தியன் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஒரு வாழ்க்கை வரலாறு

₹495+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அருண் திவாரி, நாகலட்சுமி சண்முகம்
பதிப்பகம் :மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
Publisher :Manjul Publishing House
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :548
பதிப்பு :1
Published on :2019
ISBN :9788183227377
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Add to Cart

வாழ்வின் பொருள் என்பது  ஒரு தத்துவரீதியான, ஆன்மீகரீதியான கேள்வி. வாழ்வதன் முக்கியத்துவத்தைப் பற்றியது அது. கலாமின் எண்பத்தி மூன்று வருட வாழ்க்கைப் பயணத்தின் ஊடாகப் பல வடிவங்களில் அது வெளிப்படுத்தப்பட்டிருப்பதை வாசகர்களால் காண முடியும். கலாமின் வாழ்க்கையைப் பற்றி படிப்பதன் மூலம் - 
 
"நான் என்ன செய்ய வேண்டும்?",
"நான் ஏன் இங்கு இருக்கிறேன்?",
"வாழ்க்கை என்பது எதைப் பற்றியது?",
"என் வாழ்வின் நோக்கம் என்ன?" 
 
போன்ற தங்களுடைய சொந்தக் கேள்விகளுக்கான விடைகளை வாசகர்கள் தங்களுக்குத் தாங்களே கண்டுபிடித்துக் கொள்வார்கள். இந்நூலாசிரியர் முப்பத்தி மூன்று வருடங்களாகக் கலாமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். ஏவுகணைகளை உருவாக்கும் பணித்திட்டத்தில் கலாமின் கீழ் ஓர் அறிவியலறிஞராகப் பணியாற்றிய அவர், கலாமின் தொழில்நுட்ப மேலாளராகவும், இறுதியில் அவருக்குச்  சொற்பொழிவுகளை எழுதிக் கொடுப்பவராகவும் அவருடைய நூல்களின் இணையாசிரியராகவும் ஆனார். அப்துல் கலாம் அவர்கள், சமுதாயத்தின் கீழ்மட்ட நிலைகளைச் சேர்ந்த மக்களுக்காக ஆதரவு குரல் கொடுத்தவர் என்றும், அவர்களை உத்வேகப்படுத்துவதற்கும் உயர்த்துவதற்கும் தன்னுடைய பதவியைப் பயன்படுத்தி அயராது பாடுபட்டவர் என்றும் இந்நூலாசிரியர் விளக்குகிறார். இறுதியாக, மனத்தின் மூன்று விஷங்களான பொறாமை, வெறுப்பு, மெத்தனம் ஆகியவற்றிலிருந்து விடுபட்ட ஒரு மகான் அவர் என்று இந்நூலாசிரியர் கூறுகிறார். 
 
ஒழுங்குடன்கூடிய மனத்தைக்கொண்ட, தன் ஐம்புலன்களை முழுமையாகத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்த, சமய நம்பிக்கை கொண்ட ஓர் உண்மையான மனிதர் கலாம் என்பதை இப்புத்தகத்தின் வாயிலாக நீங்கள் பார்க்கலாம்.