-
கண், காது, மூக்கு, தோல், கால்கள், கைகள் போன்ற புற உடல் உறுப்புகளை எவ்வளவு முக்கியமாக பாதுகாக்கிறோமோ, அதைவிட அதிக முக்கியத்துவம் கொடுத்து, இதயம், மூளை, எலும்பு, சிறுநீரகம், நுரையீரல், கணையம், கருப்பை... போன்ற உள் உறுப்புகளையும் பாதுகாக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. ஒவ்வொரு உறுப்பும் ரத்தத்தோடு தொடர்புடையது என்றாலும், அந்த ரத்தத்தின் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் முக்கியமான உடற்கூறு எலும்புகள்தான். உடலுக்கு உருவம் கொடுப்பது மட்டுமல்லாமல், நம்மை அசைய வைப்பதற்கும், மூளை இடும் கட்டளைகளை தசைகளின் உதவியோடு இயங்க வைப்பதற்கும் உறுதுணையாக இருப்பது எலும்புகள்தான். எலும்பு மற்றும் மூட்டு ஆகியவற்றின் பணி, வளர்ச்சி, ஆரோக்கியம் மற்றும் நோய் பற்றி, வாசகர்கள் அறிந்து விழிப்பு உணர்ச்சி பெறும் வகையில், ஆனந்த விகடனில் ‘உச்சி முதல் உள்ளங்கால் வரை’ என்ற பகுதியில் கட்டுரைகள் வெளிவந்தன. ‘மிஸ்டர் போன்ஸ்’ என்ற தலைப்பில், டாக்டர் எம்.பார்த்தசாரதி எழுதிய அந்த மருத்துவக் கட்டுரைகள், நகைச்சுவை கலந்து எளிமையான நடையில் எழுதப்பட்டதால், வாசகர்கள் பயமில்லாமல் ரசித்துப் படித்தார்கள். கடந்த பதினெட்டு வருடங்களில், எலும்பு_மூட்டு வேதனைகளால் பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வலியைப் போக்கி, ஊனம் ஏற்படாமல் தடுத்திருக்கும் டாக்டர் பார்த்தசாரதி, இடுப்பு எலும்பு முறிவு மற்றும் கால்மூட்டு சிகிச்சையில் புதிய முறைகளை உருவாக்கி இருப்பதையும் விளக்கியிருக்கிறார். விகடனில் வெளியான ‘துப்புரவுத் தொழிற்சாலை’ மற்றும் ‘மிஸ்டர் போன்ஸ்’ ஆகிய இரண்டு பகுதிகளும் சேர்ந்து ஒரே நூலாக ‘உச்சி முதல் உள்ளங்கால் வரை’ _ மூன்றாவது பாகம், ஏற்கெனவே விகடன் பிரசுரமாக பல பதிப்புகள் வெளிவந்து வெற்றி பெற்றது. வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அந்த நூலிலிருந்து ‘மிஸ்டர் போன்ஸ்’ பகுதி மட்டும் பிரிக்கப்பட்டு, கூடுதலாக நவீன மருத்துவமுறைகள் சேர்க்கப்பட்டு இப்போது ஒரு தனி நூலாக மலர்ந்திருக்கிறது. இந்தப் புத்தகம் விவரிக்கும் தகவல்கள் உங்களை நிச்சயம் பிரமிக்கச் செய்யும்!
-
This book Mister Phones is written by Dr.M.Parthasarathy and published by Vikatan Prasuram.
இந்த நூல் மிஸ்டர் போன்ஸ், டாக்டர்.எம். பார்த்தசாரதி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mister Phones, மிஸ்டர் போன்ஸ், டாக்டர்.எம். பார்த்தசாரதி, Dr.M.Parthasarathy, Maruthuvam, மருத்துவம் , Dr.M.Parthasarathy Maruthuvam,டாக்டர்.எம். பார்த்தசாரதி மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr.M.Parthasarathy books, buy Vikatan Prasuram books online, buy Mister Phones tamil book.
|