book

அவளுக்கென்று ஒரு மனம்

Avalukkeanru Oru Manam

₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அனிதா சங்கர்
பதிப்பகம் :புவனேஸ்வரி பதிப்பகம்
Publisher :Arivalayam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :380
பதிப்பு :1
Published on :2018
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Add to Cart

இங்க தாங்க நம்ப கதையோட நாயகிய அறிமுகப் படுத்த போறேன். அமைதியான பசுமையான அந்த இடத்தில் அழகாக இருந்தது அந்த வீடு. பழங்கால கட்டிடக்கலையோடு இக்கால கட்டிடக் கலையும் இணைந்து இருந்தது. மார்கழி மாதம் அதன் குளிரோடு அந்த வைகறை பொழுதும் விடிந்து கொண்டிருந்தது. அந்த வீட்டில் மாடியில் உள்ள அந்த அறையின் முன்பு காபியுடன் நின்று கொண்டிருந்தார் அனன்யா வின் தாய். "ஏய்.. கதவ திறடி..” என்று அந்தக் கதவை தட்டிக் கொண்டிருந்தார் அனன்யாவின் தாய். ''அய்யோ.. இந்த அம்மா வேற மிட்நைட்ல எழுப்புறாங்க, கவி.. ஏய்.. அந்த கதவை திறடி...” என்று அருகில் கையை தடவிப் பார்த்த அனன்யா. கண்ணை கசக்கிக்கொண்டு எழுந்தாள். குளியலறை யில் தண்ணீர் விழும் சத்தம் கேட்க கவி குளிக்கிறாள் என்று புரிந்துகொண்டவள், எழுந்து சென்று கதவைத் திறந்தாள். அங்கு அவளது அன்னை காபி ட்ரேயுடன் நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்தவள் நடுவுல கொஞ்சம் பக்கம் விஜய்சேதுபதி மாதிரி "அப்ப.... யாருடா இந்த பொண்ணு..’" என்று தன் தாயைப் பார்த்துக் கூறி னாள்.