-
ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கி நம்மைத் தேனில் நனைய வைப்பவை மாணிக்க வாசகரின் திருவாசகப் பாக்கள்.
நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது ஒன்றேயும் இல்லை என்று இறைவனிடம் முழுவதுமாக ஆத்ம சமர்ப்பணம் ஆனவர்களை ஆனந்த பரவசத்தின் ஆழத்திற்கே அழைத்துச் செல்பவை இப்பாடல்கள்.
இந்நூல் திருவருளை அடைவதற்கான திசைகாட்டி.
துன்பக் கடலிலிருந்து கரையேறுவதற்கான கலங்கரை விளக்கம்.
முக்தியுலகிற்கு அழைத்துச் செல்வதற்கான ராஜபாட்டை
இந்த அருள்நூலுக்கு அழகான உரை எழுதியிருக்கிறார் கவிஞர் பத்மதேவன்.
இந்த உரை மாணிக்கவாசகின் மனப்போக்கோடு ஒத்து நடப்பது; ஒட்டிக் கிடப்பது. அந்தத் திருவருட்செல்வரின் உணர்வுகளெல்லாம் பிரபலிக்கும்படியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து, நுட்பமான உரையைச் செப்பமான முறையில் உரையாசிரியர் செய்தளித்திருக்கிறார்.
உணர்ந்து படியுங்கள். உருகிப் படியுங்கள்!
உட்கண் திறக்கும்! பேரின்ப உச்சம் கிடைக்கும்!
-
This book Thiruvasagam Moolamum Uraiyum is written by Kavignar Padmadevan and published by Karpagam Puthakalayam.
இந்த நூல் திருவாசகம் மூலமும் உரையும், கவிஞர் பத்மதேவன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thiruvasagam Moolamum Uraiyum, திருவாசகம் மூலமும் உரையும், கவிஞர் பத்மதேவன், Kavignar Padmadevan, Aanmeegam, ஆன்மீகம் , Kavignar Padmadevan Aanmeegam,கவிஞர் பத்மதேவன் ஆன்மீகம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Kavignar Padmadevan books, buy Karpagam Puthakalayam books online, buy Thiruvasagam Moolamum Uraiyum tamil book.
|