book

அப்துல்கலாம் ஓர் அற்புத வாழ்க்கை

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோழராஜன்
பதிப்பகம் :அடோன் பப்ளிஷிங் குரூப்
Publisher :Addone Publishing Group
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2015
Out of Stock
Add to Alert List

ஏவுகணை மனிதர் அப்துல்கலாம். இந்திய எவுகணைத் திட்டத்தின் தந்தையாக கருதப்பட்டு, இளைஞர்களின் கனவு நாயகராக மாறிவிட்டவர். தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் தீவில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்தவர். இந்தியா தனக்கென்று செயற்கைக் கோள் ஏவுகலங்களையும், ஏவுகணைகளையும் உற்பத்தி செய்து, பாதுகாப்பு துறையில் சுயசார்பு அடைவதற்கு காரணமானவர். எஸ்.எல்.வி.3 செயற்கைக் கோள் ஏவுகலத்தை முதன்முதலாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை நிகழ்த்தினார். பின்னர் ஒருங்கிணைந்த ஏவுகணைத் திட்டத்தை வழிநடத்தி, பிருத்வி, அக்னி என்று பல்வேறு ஏவுகணைகளை உருவாக்கி சாதனை நிகழ்த்தினார். இதன்மூலம், பாகிஸ்தானையும், சீனாவையும் இந்திய ஏவுகணை வளையத்திற்குள் கொண்டுவந்தார். 60களிலும் 70களிலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் முக்கியமான நபராக இருந்தார். 80களின் இறுதியில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆய்வுக் கூடத்தில் ஏவுகணைகளோடு வாழ்க்கை நடத்தினார். 90களில் இந்திய தொழில்நுட்பத்தின் தூண்டு கோலாக மாற்றியதற்கான இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்றார்.