book

அநீதி, நீதி, சமூகநீதி

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேவ. பேரின்பன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :126
பதிப்பு :2
Published on :2013
ISBN :9788123418124
Add to Cart

சமூக ரீதியாக யார் தகுதி இல்லை என்று மறுக்கப்பட்டு இருக்கிறார்களோ அவர்கள் தகுதியைப் பெறுகின்ற வகையில் வழங்கப்படுவதுதான் மும்பை சமூகநீதி மாநாட்டில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் விளக்கவுரைமும்பை, டிச.25 அனைவருக்கும் நீதி என்று சொன்னாலும், சமூகநீதி என்று சொல்லுவதற்குக் காரணம், சமூக ரீதியாக யார் தகுதி இல்லை என்று மறுக்கப்பட்டு இருக்கிறார்களோ, ஒடுக்கப்பட்டு இருக்கிறார்களோ அவர்கள் சமூகத் தகுதியைப் பெறுகின்ற வகையில் வழங்கப்படுவதுதான்.என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்.மும்பையில் சமூகநீதி மாநாடு26.11.2018 அன்று மும்பையில் நடைபெற்ற சமூகநீதி மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் உரை யாற்றினார். அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு: அப்படியாவது, சத்திரியர் என்று சொல்லிக் கொள்ப வர்கள், வைசியர் என்று சொல்லிக் கொள்பவர்கள், சூத்திரர் என்று சொல்லிக் கொள்பவர்கள் அதிலிருந்து விடுபட்டு வரமாட்டார்களா? சமூகநீதியைப் பாதுகாக்கவேண்டுமானால், அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கவேண்டும்; அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், ஜனநாயக சக்திகள் அகில இந்திய அளவில் அணி திரளவேண்டும். அதற்கான களத்தை அமைத்துப் போராடிக் கொண்டிருக்கின்ற ஒரு அரசியல் கட்சி அல்லாத இயக்கம்தான் திராவிடர் கழகம். அதனை வழிநடத்திச் செல்லுகிற தலைவர்தான் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள்.அவருடைய தலைமையில் இயங்குகிற மும்பை திராவிடர் கழகத்தின் இந்த அரிய முயற்சியை நெஞ்சாரப் பாராட்டி, வாழ்த்தி, வாய்ப்புக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.நன்றி, வணக்கம்!-