book

சமண முனிவர்கள் எழுதியது திருக்குறள்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் துளசி. இராமசாமி
பதிப்பகம் :விழிகள்
Publisher :Vizhikal
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :218
பதிப்பு :1
Published on :2008
Add to Cart

உலகுக்கொரு காரணப்பொருளைச் சமணம் ஒப்புவதில்லை; உலகம் ஒரு தான்தோன்றி - இதுவே சமண நம்பிக்கை.

சமணப் புரிதல் 'மூவா முதலா உலகு'
வள்ளுவம் சொல்வது "ஆதிபகவன் முதற்றே உலகு"

*****     *****     *****     ******    *****     *****     ***** 

கடவுள் வாழ்த்து சமணத்தில் இல்லை,
'வாழ்விப்பர் தேவர் என மயங்கி வாழ்த்துதல்
   பாழ்பட்ட தெய்வ மயக்கு'
              - அருங்கலச்செப்பு  

கடவுள் வாழ்த்துக்கென்றே ஒரு தனி அதிகாரம் வள்ளுவத்தில்

*****     *****     *****     ******     *****     *****     *****

"அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
 பிறவாழி நீந்தல் அரிது"

சமண முன்னோடிகளான தீர்த்தங்கரர் தாள் சேர்ந்தால் பிறவிக் கடலைக் கடக்கலாம் எனும் கருத்தியல் அங்கே இல்லை; மஹாவீரர் தம் முன்னோடிகளான பிற தீர்த்தங்கரர்க்கு ஆலயம் அமைத்து வழிபட்டதாகச் செய்தி கிடையாது. அவர்கள் மரியாதைக்குரியோர் எனுமளவில்தான் அவர்களுக்கு முக்கியத்துவம்.

"அறவாழி வேந்தன்" - இவரே சமணப் போற்றலுக்குரியவர், 
'அறவாழி அந்தணன்' இல்லை.