book

உள்ளங்கையில் உலகம்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆதனூர் சோழன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2007
Add to Cart

சிரியாவில் என்ன நடந்தது? உக்ரேன் பிரச்னை என்றால் என்ன? அரவிந்த் கேஜரிவால் எத்தனை நாட்கள் தில்லி முதல்வராக இருந்தார்? இந்திய பிரதமரான பின்னர் நரேந்திர மோடி மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம் எது? உலகையே உலுக்கும் ஐ.எஸ். பயங்கர வாதிகள் என்பவர்கள் யாவர்? இவையெல்லாம் நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பும் தகவல்கள். பல்வேறு சமயங்களில் இவற்றைப் படித்து, பின்னர் மறந்திருப்பீர்கள். அல்லது பிரச்னைகளின் பின்னணி என்ன? யார் சம்பந்தப்பட்டவர்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாது இருப்பீர்கள்.


இனி உங்களுக்குப் பிரச்னை இல்லை. ‘உள்ளங்கையில் உலகம்’ உங்கள் கேள்விகள் அனைத்துக்கும் விடை சொல்லும். அதுவும் உங்களுக்குப் பிடித்த கேள்வி-பதில் வடிவிலேயே. மேலும், சுவாரசியத்தைக் கூட்ட சிறு சிறு குறிப்புக்களாக ஏராளமான தகவல்களும் தரப்பட்டுள்ளன.


கிராம நிர்வாக அலுவலர் முதல் ஆட்சிப் பணித் தேர்வு வரை, போட்டித் தேர்வுகள் எழுதும் ஒவ்வொரு ஆர்வலருக்கும் இந்தப் புத்தகம் ஒரு கையேடு. சட்டென புரட்டிப் பார்த்துத் தெரிந்துகொள்ளும் வகையில் அத்தியாயங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றொரு சிறப்பு. உலக விஷயங்களிலும் உள்ளூர் செய்திகளிலும் ஆர்வமுள்ள ஒவ்வொரு நபருக்கும் இந்த நூல் பயன்மிக்க துணைவன்.


ஜி.எஸ்.சுப்ரமணியன் (ஜி.எஸ்.எஸ்.) பத்திரிகைகளில் பல தொடர்கள் மற்றும் கட்டுரைகள் எழுதியவர். அவரது படைப்புகள் பல நூல் வடிவம் பெற்றுள்ளன. பொது அறிவுச் சார்ந்த பல விஷயங்கள் மட்டுமல்ல, ஆன்மிகம் சார்ந்த பல கட்டுரைகளின் படைப்பாளி. அருண் சரண்யா என்ற பெயரிலும் எழுதுகிறார். பிரபல நிறுவனங்களுக்காக மனிதவளப் பயிற்சி வகுப்புகள் எடுக்கும் பயிற்றுனர், புகழ்பெற்ற க்விஸ்மாஸ்டர் எனப் பன்முகம் கொண்டவர்.