book

குறிஞ்சித் தேன்

₹230+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜம் கிருஷ்ணன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :399
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

பன்னிரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நீலக்குறிஞ்சி பூக்கும் இம்மலைகளில் வண்டுகள் அந்தப் பருவத்தில் பாறை இடுக்குகளிலும் மரக்கொம்புகளிலும் அடையடையாகத் தேன் வைக்குமாம். இந்நாட்களில் குறிஞ்சு பூக்கும் பருவமே தெரியவில்லை. இயற்கை வாழ்வு குலைந்து செயற்கை வாழ்வின் அடித்தள முயிற்சிபோல் பணத்தைக் குறியாக்கொண்ட வாழ்வுக்குத் தேவையான தேயிலை - காபியே மலைகளில் நீள நெடுக கண்ணுக்கு எட்டிய வரையில் இடம் கொண்டன. பச்சைத் தேயிலை மணத்தை நுகர்ந்து கொண்டு அந்தக்குறிஞ்சித் தேனின் இனிமையைக் கற்பனையால் கண்டு ஒரு வாழ்வில் நிக ழும் மாற்றங்களையும் போராட்டங்களையும் சித்திரிக்க முயன்றிருக்கிறேன் .  நான் இந்நவீனத்தை எழுத்த் துணிந்த நாட்களில் மனித வாழ்வின் நிலையாய ஈரங்களினின்று அகன்று செல்ல வழி வகுக்கும் வாழ்வின் வேறுபாட்டைக் குறியாத் தான் புலப்படுத்த எண்ணினேன். இன்று அந்தக் கருத்து வருந்த்த் தக்க வகையில் அச்சமூட்டும் உண்மையாகப் பரவியிருக்கிறது .என்னும் மனித மனத்தின் இயல்பான ஊற்றுக் கண்கள் அன்பின் அடியிலையைக் கொண்டெதன்று நம்பிக்கை கொள்வோம் . நல்ல நல்ல செயல்கள் பயனளிக்க ஒரு தலைமுறைக் காலம் பொறுத்திருக்கலாம்  என்பது ஆன்றோர் வாக்கு.இந்நூலைநான் எழுதுவதற்காக மேற்கொண்ட அல்லல்கள் பலப்பல.