book

தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (களவியல், கற்பியல், பொருளியல்)

Thoolkaappiyam porulathikaaram nacchinaarkkiniyar urai(kalaviyal, karpiyal, poruliyal)

₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நச்சினார்க்கினியர்
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :இலக்கணம்
பக்கங்கள் :328
பதிப்பு :1
Published on :2017
Add to Cart

உங்கள் கைகளில் தவழும் தொல்காப்பியம் பொருளதிகாரம் என்னும் முழுமுதற் செழுந்தமிழ் நூல் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பெற்றது. இந்நூல் தூய தமிழ் காப்பியக்குடியில் தோன்றிய தொல்காப்பிய முனிவரால் அருளிச் செய்யப்பட்டது. எழுத்தும் சொல்லும் பொருளாராய் தற்கருவியாகும். 'பொருள்' 'இன்பம்', 'பொருள்' அறமென மூவகைப்படும். பொருளதிகாரத்துள் கூறப்படுவன இம்மூன்றுமேயாம். இவையே தொன்மைத் தமிழர் தூய பண்பாடுகள்; தனிப்பெரு நாகரிகம்; எழின்மிகு ஒழுகலாறு; தமிழர்தம் வாய்மை வரலாறு. அவ்வாழ்வின்கண் அறிந்தும் அறியாமலும் குற்றம் நேரின் அதைப் பொறையெனும் நன்னீரால் அவித்து நிறையெனும் சிறை நிறுவித் தூய்மையாக்குதல் பொருளியலாகும். இது, "அன்புடைக் கணவர் அழிதகச் செயினும், பெண் பிறந்தார்க்குப் பொறையே பெருமை" என்பதனாலுணரலாம். கழக வழியாக எழுத்துஞ் சொல்லும் அகத்திணை புறத்திணையும் முன்னமே வெளிவந்துள்ளன. இப்பொழுது களவியல் கற்பியல் பொருளியல் என்னும் மூன்றும் இந்நூல் வழியாக வருகின்றன. இதன்கண் உரையாசிரியர் நக்கீரனார் இளம்பூரணர் முதலியோர் கருத்துக்கள் இன்றியமையாத இடங்களில் அடிக்குறிப்பாகக் காட்டப்பட்டிருக்கின்றன. பயில்வோர்க்கு எளிதாயிருக்கும் பொருட்டுக் சந்திகள் பிரிக்கப்பட்டுள்ளன.