book

கம்பரின் வாலிவதைப் படலம் மூலமும் உரையும்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கம்பர்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :70
பதிப்பு :1
Published on :2017
Add to Cart

இன்று ஒரு குறிப்பு மட்டும், இராமனின் திட்டம் பற்றி: தன்னுடைய தகனத்துக்கு பிரதியுபகாரமாக, முன் கூட்டி சொல்லப்பட்ட, கபந்தனின் ஆலோசனையை பற்றி இப்போதைக்கு நான் எழுதவில்லை. ம்பநாடரின் இராமகாதை வால்மீகி ராமாயணத்தின் மொழிபெயர்ப்பும் இல்லை; தழுவலும் இல்லை. மு.. அவர்கள் குறிப்பிட்ட மாதிரி, இது ஒரு புது காப்பியமே. வால்மீகியின் சீதை வேறு; கம்பனின் சீதை வேறு என்கிறார், டி.கே.சி.  கம்பனின் அங்கதன் வால்மீகியின் அங்கதன் அல்ல. கம்பரின்மாயாசனகப்படலம்’ வால்மீகியில் இல்லை. இரணியப்படலமோ கம்பரின் தனிப்படைப்பு.. அவர் சுட்டியபடி, ‘இந்த வேறுபாடுகள் கதைச்சுவையையும், பண்புச்சிறப்பையும், கற்பனை வளத்தையும் கூட்டுவிக்கின்றன.’வாலி வதைப்படலம் கம்பரின் வாதத்திறனுக்கும், நடுவு நிலைக்கும் நிகரற்ற எடுத்துக்காட்டு. கம்பரை பற்றி நிறைய எழுத ஆர்வம். கை ஒத்துழைக்க மறுக்கிறது. அதனால், சிறிய இடுகைகளை, தவணை முறையில் தர அனுமதியுங்கள், இடையில் தாராளமாக பின்னூட்டங்கள் தரலாம். தயை கூர்ந்து, திசை மாற்ற வேண்டாம், இந்த தொடர் முடியும் வரைநான் முன் வைப்பது: ஶ்ரீராமசந்திர மூர்த்தி வாலியை வதம் செய்தது தர்மம் இல்லை. கம்பர் இந்த படலத்தை படைத்தபோது மிகவும் சங்கடப்பட்டிருப்பார் என்று எனக்குத் தோன்றுகிறது. அவர் இராமனுக்கு வாதத்திறன் அளிக்கவில்லை. வாலி அடிப்பட்டு வீழ்ந்த பிறகு, அவனுக்கும், இராமனுக்கும் நடந்த வாதம், இலக்குவனின் குறூக்கீடு உள்பட, 56 பாடல்களில் உள்ளன. அவற்றுக்கு, பிறகு, வருகிறேன்.