book

சமைக்காத சத்துள்ள உணவுகள்

Samaikatha Sathulla Unavugal

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரத்தின சக்திவேல்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :144
பதிப்பு :4
Published on :2008
குறிச்சொற்கள் :பச்சை காய்கறிகள், பழங்கள், பச்சை கீரைகள், இயற்கை உணவுகள், கிழங்கு வகைகள்
Out of Stock
Add to Alert List

அடுப்பில்லாமல் சமைக்க முடியுமா? சமையல் என்றாலே   நமக்கு அடுப்பின் ஞாபகம்தானே வருகிறது. ஆமாம் அடுப்பில்லாமல் சமைக்க முடியும். அடுப்பில்லாமலே உணவு தயாரித்து உண்ண முடியும். உலகத்துலேயே மிகப் பெரிய சமையல்காரன், சூரியன்தான். அடுப்பில்லாமல் சமைப்பதிலே அவன் மிகவும் கெட்டிக்காரன். அடுப்பின்றிச் சமைத்து ஆயிரக்கணக்கான உணவு வகைகளை அவன் படைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறான். பழங்கள், கீரைகள், காய்கறிகள், கிழங்கு வகைகள் ஆகிய அனைத்தும் அடுப்பின்றிச் சமைக்கப்பட்டவைகளே . இவை இயற்கையாக விளைந்தவைகள் ஆயினும், சூரியனின் உதவியில்லாமல்  சூரிய ஒளி இல்லாமல் இவை உருவாகி இருக்க முடியாது. சூரியன் மாத்திரமில்ல, பஞ்சபூத சக்திகளின் உதவியால் தான் இந்த இயற்கை உணவுகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. பெரிய சமையல்காரனான சூரியனின் உதவியால் அடுப்பில்லாமல் சமைக்கப்ட்ட இயற்கை உணவுகள் நமக்குக் கிடைத்த போதிலும், நாம் அவற்றை அப்படியே உண்பதில்லை. சில சமயம் அப்படியே உண்கிறோம். சில சமயங்களில் அவற்றை வேறு வேறு வடிவங்களில் உண்ண விரும்புகிறோம். சாறாகப் பிழிந்து உண்ண விரும்புகிறோம். கலவையாகக் கலந்து உண்ண விரும்புகிறோம். எப்படி உண்ண விரும்பினாலும் அடுப்பில்லாமல் அவற்றை இயற்கையாக தயாரித்து உண்ணுவதே முக்கியமாகும். சத்துக்கெடாமல். சுவையாக, உணவை அடுப்பில்லாமல் சமைக்க முடியுமா ?முடியும் என்பதை இப்புத்தகம் நிரூபிக்கிறது. சாறுகள், கலவைகள், கூட்டுகள், முதலிய விதவிதமான உணவுகளைத் தயாரித்து அளிக்கும் எண்ணற்ற உணவு தயாரிப்பு முறைகளை இப்புத்தகம் அருமையாக விளக்குகிறது.

                                                                                                                                               -  பதிப்பகத்தார்.