book

திருவிழாக்கள்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788123436685
Add to Cart

சிறுவயதில் ரசித்து திரைப்படம் பார்த்து மகிழ்ந்த நினைவுகள், பள்ளி வாசலில் உள்ள கடையில் மிட்டாய் வாங்கிய நினைவு, சிறுவனாக இருந்த போது நண்பர்களுடன் விளையாடிய விளையாட்டு நினைவுகள் என பல நினைவுகளைப் பகிர்ந்து உள்ளார்.

“முனியப்பன் கோயில் இரவு நேரத்தில் மோகினிப் பிசாசு நடமாடுவதாய் அவர்கள் கிளப்பிய வதந்தி நினைவில் இருக்கும். எனவே அவன் முனியப்பன் கோயில் வழியாகச் செல்லும் ஒவ்வொரு முறையும் நடுங்கிக் கொண்டே செல்வான். ஆனால் வெளியூர்க்காரனுக்கு இந்தப் பிரச்சனைகள் எதுவுமில்லை. அவன் முனியப்பன் கோயிலை கோயிலாகத் தான் பார்ப்பான். நம் பயங்கள் உண்மையானவை அல்ல. மற்றவர்கள் தொடர்ந்து ஏற்படுத்திய நினைவுகளின் தாக்கங்கள் தாம் என்பதே உண்மை.

பேய் என்பது உண்மை அல்ல வதந்தி கட்டுக்கதை என்பதை உணர்த்தி உள்ளார்.  இன்றைய பேய்ப்பட இயக்குனர்கள் இதனை உணர்ந்திட வேண்டும்.  மூடநம்பிக்கையான பேய் இருப்பது போல பரப்பி பணம் சம்பாதிக்கும் செயலை நிறுத்திட வேண்டும்.

“நாம் பழகிய ஒரு நிறுவனம் மூடப்படும் போது நமக்கு ஒரு வலி தோன்றுகிறது.  நாம் புத்தகங்கள் வாங்கிய கடை திடீரென இழுத்து மூடப்படும் போது நமக்குள் ஒரு சின்ன மரணம் நிகழ்கிறது”.

நினைவுகள் சுகமானதும் உண்டு வலி மிகுந்தலும் உண்டு.  நல்ல நினைவுகளை மீட்டெடுப்போம். கெட்ட நினைவுகளை மறக்கடிப்போம் என உறுதி எடுக்க வைக்கும் நூல். குற்றாலம், தாஜ்மகால், இயற்கைக் காட்சிகள், புகைப்படங்கள், ஓவியங்கள் இருப்பதால் நூலினைப் படிக்க இதமாகவும் இனிமையாகவும் உள்ளன.  தரமாக அச்சிட்ட நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு பாராட்டுக்கள்.