book

புதுவிதமான சாதங்களும் பொருத்தமான சைடு டிஷ்களும்

Puthuvithamana Sathagangalum Poruthamana Side Dishgalum

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சசிமதன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :112
பதிப்பு :3
Published on :2009
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்புகள், இல்லத்தரசிகள், ருசி
Add to Cart

சமையல் ஒரு கலைதான் . தனித்தனி வர்ணங்களின் சேர்க்கையில் ஓவியக்கலை உண்டாவதுபோல் பச்சையாக இருக்கும்
உணவுப் பொருள்களை  உண்பதற்குத் தக்கவாறு செய்வதனால் சமையலும் ஒரு கலையாயிற்று. அது எல்லோருக்கும் சிறப்பாகக் கைவந்த  கலை ஆகிவிட்டது. அளவோடும், செய்யும் முறையோடும் செய்வதால் சமைத்த பொருள்களின் சுவை கூடுகிறது. பச்சையாக இருக்கும்போது உணவுப் பொருட்களில் இருக்கும் சில வேண்டாத வாசனைகள் சமைக்கும் போது நீங்கி விடுகின்றன. உணவு பொருள்களில் முக்கியமான சத்துக்களும் இருக்கின்றன. அவை உடலுக்குச் சக்தியையும் உஷ்ணத்தையும் கொடுக்கும். கார்போஹட்ரேட் ,கொழுப்பு உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதம் உடலிலுள்ள இரத்தம், எலும்பு, நரம்பு, போன்றவற்றின் ஆரோக்கியத்துக்கும். உடலில் வியாதிகளைத் தடுக்கும் சக்தியைக் கொடுப்பதற்கும் தேவையான வைட்டமின்கள் தாது உப்புகள் முதலியன ஆகும். எழுத்துக்களை மாற்றிப்போட்டு பல்லாயிரக்கணக்கான சொற்களை உண்டாக்குவதுபோல, இருக்கும் உணவுப்பொருட்களின்  பல தரப்பட்ட சேர்க்கையால் பலவிதமான சமையல் குறிப்புகள் கிடைக்கும். மனிதன் மாறுதல்களை விரும்புபவன் அப்படிப்பட்டவனுக்கு வேலை செய்ய வேண்டிய சக்தியைக்கொடுக்கும் உணவில் தினமும் மாறுதலே இல்லாமல் இருந்தால் அது அவனுக்கு உற்சாகத்தைத் தராது. திருமணம் செய்து கொண்டு புது வாழ்வைத் தொடங்கும் இல்லத்தரசிகள் தெரிந்து வைத்துக்கொண்டு கணவன்மார்கள் மனம் மகிழ உணவு படைத்தல் மிகவும் அவசியம்.

                                                                                                                                                              - சசிமதன்.