-
‘என்னுடைய புத்தக அலமாரியில் விகடன் பிரசுரமாக வெளிவந்த ‘ஹாய் மதன்’ கேள்வி_பதில் தொகுப்பின் நான்கு பாகங்களும் இருக்கின்றன. எந்த சப்ஜெக்ட்டில் எனக்கு எப்போது சந்தேகம் வந்தாலும் நான் உடனே புரட்டிப் பார்ப்பது இந்த நூல்களைத்தான்... ஐந்தாவது பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...’ _ வாசகர் ஒருவர் எங்களுக்கு எழுதியிருந்த கடிதத்தின் ஒரு பகுதி இது. பொதுவாக பொது அறிவு புத்தகங்களில் சுவாரஸ்யங்கள் இருக்காது; வெறும் தகவல்களால் மட்டுமே நிரப்பப் பட்டிருக்கும். அது விரைவில் நம்மை சோர்வடையச் செய்துவிடும். இந்த மனோபாவம் தெரிந்துதான், ‘என் கேள்விக்கு என்ன பதில்?’ என்று வாசகர்கள் எழுப்பும் வினாக்களுக்கு ஏனோதானோவென்று இல்லாமல் நிஜமான ஈடுபாட்டுடன், அங்கங்கே நகைச்சுவை கலந்து மதன் பதிலளித்து வருகிறார். தவிர, யாருமே தொடுவதற்குத் தயங்கும் ஏரியாக்களில்கூட இவர் புகுந்து புறப்படுவதால் ‘எதைப் பற்றியும் இவரிடம் சந்தேகம் கேட்டு தெளிவு பெறலாம்’ என்ற நம்பிக்கை பெரும்பாலான வாசகர்களிடம் இருந்துவருகிறது. விகடனில் வெளியான கேள்வி_பதில்களைத் தொகுத்து, வெளியான நான்கு பாகங்களும் வாசகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுவருகின்றன. இப்போது உங்கள் கரங்களில் தவழும் பாகம் 5_ல், 2007 நவம்பர் முதல், 2008 அக்டோபர் வரையில் வாசகர்களின் கேள்விகளுக்கு, விகடனில் மதன் எழுதிய பதில்கள் இடம் பெற்றிருக்கின்றன. லேட்டாக வராத லேட்டஸ்ட் இது! படித்து, பத்திரப்படுத்தி, பயன்படுத்த வேண்டிய இன்னொரு தொகுப்பு இது என்பதில் ஐயமில்லை!
-
This book Hai Mathan (part 5) is written by Madhan and published by Vikatan Prasuram.
இந்த நூல் ஹாய் மதன் (பாகம் 5), மதன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Hai Mathan (part 5), ஹாய் மதன் (பாகம் 5), மதன், Madhan, Kelvi-Pathilgal, கேள்வி-பதில்கள் , Madhan Kelvi-Pathilgal,மதன் கேள்வி-பதில்கள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Madhan books, buy Vikatan Prasuram books online, buy Hai Mathan (part 5) tamil book.
|