book

நகரத்தார் நளபாகம்

Nagarthaar Nalapaagam

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலைச்செல்வி சொக்கலிங்கம்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :120
பதிப்பு :2
Published on :2009
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்புகள், முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம்
Add to Cart

எனக்கும் சமையலுக்கும் என்ன சம்பந்தம்.  இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.  திருமணம் ஆகும் வரை நான்
சமைத்ததே கிடையாது. வீட்டிலே ஆண் ,பெண் சமையல்காரர்கள்,மேல்  வேலைக்காரர்கள் என்று  பனிரெண்டு பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். காபி, சாப்பாடு என எல்லாமே இருக்கும் இடத்திற்கு வந்துவிடும். அம்மா சமையலின் ருசியை இதுநாள் வரையிலும் என்னால் மறக்க முடியவில்லை. எனக்குத் திருமணம் நிச்சயமான பிறகு அம்மா தரதரவென்று இழுத்துக் கொண்டுபோய், சாம்பார், ரசம், பொரியல்,எப்படி செய்வதென்று சொல்லிக் கொடுத்தார்கள். திருமணம் ஆகி சென்ற இடத்தில் என் மாமியார் அருமையாக சமைப்பார்கள். அம்மாவும், மாமியாரும் சொல்லித் தந்த வகையில் நான் சமைத்ததை அனைவரும் பாராட்ட  அதுவே  நான் ஏன் ஒரு உணவகத்தைத்  துவங்கக்கூடாது என்ற  எண்ணத்தை என்னுள் உண்டுபண்ணியது. அதன் விளைவாக அப்பா  வீட்டிவேயே கண்ணதாசன் மெஸ் என்ற ஒன்றை ஆரம்பித்தேன். இன்று செங்கல்பட்டிலிருந்து  கூட தினமும் என்  கடைக்கு சாப்பிட வரும் வாடிக்கையாளல்கள் உண்டு.

                                                                                                                                     -கலைச்செல்வி சொக்கலிங்கம்.