book

கடற்பாசி வளர்ப்பு

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. சுந்தரராஜ்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :தொழில்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2017
Add to Cart

கடல்பாசி வளர்த்தல் (Seaweed farming) என்பது கடல்நீரின் ஆல்காக்களை வளர்த்து அறுவடை செய்யும் நடைமுறையைக் குறிக்கும். கடல்பாசிகள் யாவும் பூக்கும் திறனற்றவையாகும். உண்மையான வேர்த்தண்டும் இலைகளும் இவற்றுக்குக் கிடையாது. எளிய வடிவத்தில், இவை பாறைகள், இறந்த பவழப்பாறைகள், கற்கள், கூழாங்கற்கள், கடினமான ஆதாரத்தளங்கள் மற்றும் பிற தாவரங்களின் மீது காணப்படுகின்றன. மிகவளர்ந்த நிலையில் இவை ஆல்காக்களின் வாழ்க்கைச் சுழற்சியை கட்டுப்படுத்துகின்றன. நீண்ட காலமாக சீனா, கொரியா சப்பான் போன்ற நாடுகளில் கடல்பாசியானது முக்கிய உணவுப் பொருளாக இருந்து வருகிறது. கெலிடியம், டெரோகிளாடியா[1], போர்ஃபைரா[2], லாமினேரியா[3] போன்ற பாசியினங்கள் வியாபார முக்கியத்துவம் வாய்ந்த சில இனங்களாகும். பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தவும், மீன்பிடி அழுத்தம் மற்றும் சுரண்டப்படும் மீன்வளத்தைக் குறைக்கவும் கடல்பாசி வளர்த்தல் ஒரு மாற்றாக கருதப்படுகிறது. உலகம் முழுவதும் கடல்பாசி ஓர் உணவு ஆதாரமாக சாகுபடி செய்யப்படுகிறது. அகரகர் மற்றும் காராகீனன் பாசிப்பொருட்கள் ஓர் ஏற்றுமதிப் பொருளாகக் கருதப்பட்டு சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்படுகின்றன