-
ஸ்கூலிலிருந்து குழந்தைகள் வரும்போது இன்று என்ன டிபன் பண்ணி வைக்கலாம் என்று உற்சாகத்துடன் நினைக்கும் தாய்மார்களுக்கும் .தினம் தினம் புது டிஷ் செய்து அசத்தலாம் என்று நினைக்கும் புதுமணப் பெண்களுக்கும், திரும்ப திரும்ப பஜ்ஜி,போண்டா, பக்கோடாவை விட்டால் வேறு டபனே இல்லையே என்று அலுத்து, சலித்துக் கொள்ளும் பெண்மணிகளுக்கும் உதவும் வகையில் அவர்களின் தேவையை மனதில் கொண்டு இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளேன். பல நாடுக்ளுக்கும் .நம் நாட்டிலேயே பல நகரங்களுக்கும் பிரயாணம் செய்யும்போது ஏற்பட்ட சுவையான அனுபவங்களையும் ,சுவையூட்டும் ஜட்டங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். சைவ சமையலில் இத்தனை வகைகளா என்று வியக்கும்படி, இந்தியா, மேல்நாட்டு, கீழ்நாட்டு உணவு வகைகளை ரகம் வாரியாகப் பிரித்து எழுதியிருக்கிறேன். நீங்களும் படித்து, செய்து பார்த்து , பயனடைவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.எவ்வளவுதான் காலம் மாறி வாழ்க்கை முறை மாறினாலும், சிறுவயதில் தாம் பாட்டி கையால் சாப்பிட்ட பாரம்பரிய உணவுகள் ஒரு மலரும் நினைவு, அதை எக்காலத்திலும் ஒதுக்க முடியாது. எனவே அவைகளையும் கலந்து அளித்திருக்கிறேன். செய்து பார்த்து உங்கள் மேலான கருத்துக்களைச் சொல்வீர்கள் என்று எதிர்பார்க்குறேன். பத்திரிகை, புத்தக உலகத்திற்கு என்னை அறிமுகப்படுத்தி வெளிச்சம் காட்டிய பிரபல, பாரம் பரியமான ஆனந்த விகடன் பத்திரிகை திரு. சீனிவாசன் அவர்களுக்கு மீண்டும் வரு முறை என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- மெனுராணி செல்வம்.
-
This book Tiffin Redi is written by and published by Karpagam Puthakalayam.
இந்த நூல் டிபன் ரெடி, மெனுராணி செல்லம் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tiffin Redi, டிபன் ரெடி, மெனுராணி செல்லம், , Samayal, சமையல் , Samayal,மெனுராணி செல்லம் சமையல்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Tiffin Redi tamil book.
|