book

போதி மரம்

Bodhi maram

₹230+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சத்யானந்தன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :246
பதிப்பு :1
Published on :2017
ISBN :9789386737175
Add to Cart

புத்தரின் மரணத்துக்கான பழியை ஒரு ஏழை மீது போட்ட வரலாற்றை மாற்றி எழுதுமளவு கற்பனையின் வீச்சு வெளிப்படும் சரித்திரப் புனைவு போதி மரம். புத்தரது வாழ்க்கைச் சம்பவங்களைச் சரடாகக்கொண்டு பின்னப்பட்ட இந்நாவலில் சுத்தோதனர், யசோதரா, ஆனந்தன் இவர்களின் ஆளுமைகள் கதாபாத்திரங்களாக சித்தரிக்கப்படுகின்றன. புத்தரின் ஞானத்தேடல் நிகழ்ந்த காலகட்டத்தை, அவர் பூரண ஞானம் பெற்ற பரிணாமத்தை கற்பனை செய்யும் பெருமுயற்சியில் நாவல் வெற்றி கண்டுள்ளது.

*பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சதங்கை, கணையாழி, நவீன விருட்சம், சங்கு, உயிர்மை, மணிமுத்தாறு, புதியகோடாங்கி, இலக்கியச் சிறகு, கனவு உள்ளிட்ட சிறு பத்திரிகைகளிலும், திண்ணை, சொல்வனம் உள்ளிட்ட இணைய-தளங்களிலும் தீவிரமாகத் தனது படைப்புகளைப் பிரசுரித்துள்ளார் கவிஞர், எழுத்தாளர் சத்யானந்தன். நவீன புனைகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகளை வித்தியாசமாகப் படைப்பவர்.