book

பாயும் தமிழகம் (தமிழகத் தொழில்துறை வளர்ச்சியின் வரலாறு)

Paayum Tamizhagam (Tamizhaga Thozhilthurai Valarchiyin Varalaru)

₹400+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். கிருஷ்ணன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :405
பதிப்பு :1
Published on :2017
ISBN :9789384149987
Out of Stock
Add to Alert List

 1980களின் ஆரம்பத்தில் பம்பாயும் ஓரளவுக்கு தில்லியுமே இந்தியாவின் பொருளாதார உலகில் ஆதிக்கம் செலுத்திவந்தன. கல்கத்தா ஓரளவு வலிமையுடன் இருந்தது. பெங்களூர் ஓய்வுபெற்றவர்களின் சொர்க்கபுரி. மதராஸ் என்பது ஒரு பெரிய கிராமம் மட்டுமே.

இன்றைய நிலை என்ன? கொல்கத்தா இந்தியப் பொருளாதார வரைபடத்திலிருந்து மறைந்துவிட்டது. மும்பையும் தில்லியும் இன்றும் அதிகாரமையங்களாக இருக்கின்றன. தெற்கில் பெங்களூரு முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக மாறியிருக்கிறது.

ஹைதராபாத் வளர்ச்சியின் படிகளில் வேகமாக ஏறிவருகிறது. ஆனால், இந்த இரண்டு பகுதிகளைவிடவும் அதிகத் தொழில் மையங்கள் இருக்கும் இடம் சென்னை! இருந்தும், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி இந்திய அளவில் கூட யாருக்கும் தெரியாத ரகசியமாகவே இருக்கிறது. தமிழக நிறுவனங்களும்கூட பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனாலும்கூட தமிழகம் தொழில்ரீதியாக முன்னேறியிருக்கும் மாநிலமாக மதிக்கப்படுவதில்லை. இந்தப் புத்தகம் முதல்முறையாக தமிழகத்தின் அடையாளத்தை மீட்டெடுத்து இந்தியப் பொருளாதார வரலாற்றில் அது வகிக்கும் இடத்தைத் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டுகிறது.

தமிழகத்தின் நீண்டகாலப் பாரம்பரியம் மிகுந்த நிறுவனங்களில் ஆரம்பித்து ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வரை உள்ளூர் சாதனைகள், வெளியில் இருந்து வந்து சாதித்தவர்கள் என அனைத்தைப் பற்றியும் விரிவாக அலசுகிறது இந்தப் புத்தகம். இந்தியத் தொழில்மயமாதல் வரலாற்றில் தமிழகத்தின் பங்களிப்பு குறித்து விரிவாக ஆராயும் முதல் நூல் என்று இதைச் சொல்லமுடியும்.

வணிகவியல் மாணவர்கள், கார்ப்பரேட் எக்ஸிக்யூட்டிவ்கள் மட்டுமல்லாமல் வர்த்தகம், நிதி நிர்வாகம், தொழில் முனைவு போன்றவற்றில் ஈடுபாடு உள்ளவர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது.