book

யானை பறந்தபோது

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமேஷ் வைத்யா
பதிப்பகம் :அகநாழிகை பதிப்பகம்
Publisher :Aganazhigai Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2017
ISBN :9789384921224
Add to Cart

இந்தப் பழங்கதைகளைத் தனது புதிய மொழியில், மிக எளிதாகவும் மனத்தில் பதியும் விதமாகவும் தந்திருக்கிறார் ரமேஷ் வைத்யா, முதல் கதையில் தொடங்கினால் விறுவிறுவென்று அனைத்துக் கதைகளையும் படித்துவிட்டுதான் கீழே வைப்பீர்கள், மற்றவர்களுக்கும் சொல்வீர்கள் - என். சொக்கன்
பாட்டுப் பாடும் தவளை. பழைய சோறு தின்னும் ஆவிகள், பயந்தாங்கொள்ளி பூதம் என அதிசயமான் ஒர் உலகம் இந்தப் புத்தகத்துக்குள் உங்களுக்காகக் காத்திருக்கிறது. இந்த நூல் , முழுக்க இருக்கிற கதைகள் நமக்கு எதையுமே போதிப்பது இல்லை. பொய் பேசாதே, திருடாதே நேர்மையாக இரு. மற்றவர்கள் மீது மரியாதை னவ என நமக்கு பாடம் சொல்லிக்கொடுப்பது இல்லை. அதனால்தான் இந்தக்கதைகள் நமக்கு மிகவும் பிடிக்கின்றன. ரமேஷ் வைத்யா , மாமாவுக்கு அறிவுரை சொல்வது பிடிக்காது போல, கதைகள் மட்டும்தான் சொல்கிறார், எதுவும் நமக்குப் புரியாமல் போகக்கூடாது என்று பார்த்துப் பார்த்து எழுதி இருக்கிறார் , - அதிஷா
பெரியவர்களைக் காட்டிலும் இன்றைய சிறார் புத்திக் கூர்மை மிக்கவர்கள். இந்தத் தொகுப்பில், மிகவும் நேரடியாகக் கதைக்குள் பாய்ந்துவிடும் உத்தியைக் கையாண்டிருக்கிறேன். படிக்கும் , சிறிய வயது வாசகர்கள் பெருமிதமாக உணர்வார்கள், பெற்றோர்கள் படித்து, குழந்தைகளுக்குச் சொல்வதாக இருந்தால், அவர்கள் விரிவாக்கிக்கொள்வதற்கு ஒவ்வொரு பத்தியிலும் இடம் விடப்பட்டிருப்பதைப் பார்க்கலாம், அதனால், பெற்றோரே கதாசிரியராகவும் உணரலாம். - ரமேஷ் வைத்யா