-
போராட்டத்திற்குப் பிறகுதான் வெற்றி என்பதையும் வென்றவர்களின் வரலாற்றுச் சிறப்பையும், உலகம் தன்னை அலங்கரித்துக் கொண்டிருக்கின்ற மகிழ்ச்சியாகவே பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றது. பசுமைப் பின்னலில் வண்ண மலர்களை ஆடையாக்கி சுழன்று கொண்டிருக்கும் இந்த பூமியில் மனிதனால் படைக்கப்பட்ட அதிசியங்களும் சாதனை வரலாறுகளும்தான் இந்த பூமிக்கு மகுடம் சூட்டிக்கொண்டு இருக்கின்றன. மண்ணிலிருந்து புறப்பட்டு விண்ணை அளந்த வரலாறு, மனித உயிர்களைத் தவிர வேறு எந்த உயிரும் செய்திவிட முடியாது. ஊக்கத்தை தம் கைப் பொருளாக வைத்திருப்பவர் கலங்குவதில்லை. சோர்வு இல்லாத ஊக்கம் கொண்டவரிடம் வழி தானை வந்து சேரும். வெற்றி உன்னை அழைக்கின்றது, தோல்வி உன்னை போவென்றது. சூரியன் வந்து உன்னை எழுப்பக் காத்திருப்பதை விட்டுவிட்டு, நீ விழித்து சூரியனை வரவேற்க வேண்டும். உன்னை எழுப்ப, முடிந்தால் சேவல்களை வளர்க்க கற்றுக் கொண்டால் போதும். வள்ளுவர் கூற்றுப்படி ஊக்கம் என்பது உங்களைக்குள்ளேயே உருவாகி, அது உங்களுக்குள்ளேயே நிரந்தரப்பட்டு, எந்தச் சூழ்நிலையிரும் நிலையான ஊக்கத்துடன் செயலாற்றிக் கொண்டிருந்தால் பெருமைக்குரிய வாழ்க்கை வாழலாம் என்பது தெளிவாகிறது. மொத்தத்தில் நீங்கள் நினைத்தைச் சாதிக்காமல் விடாதீர்கள் என்பதே வள்ளுவரின் கருத்து.
-இரா,சொ. இராசன்பே.
-
This book Ezhu Ellaam Un Kaiyil is written by and published by Karpagam Puthakalayam.
இந்த நூல் எழு எல்லாம் உன் கையில், இரா.சொ. இராசன்பே அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ezhu Ellaam Un Kaiyil, எழு எல்லாம் உன் கையில், இரா.சொ. இராசன்பே, , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suya Munnetram,இரா.சொ. இராசன்பே சுய முன்னேற்றம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Ezhu Ellaam Un Kaiyil tamil book.
|