book

மனைவி ஒரு ஹோம் மேனேஜர்

Manaivi Oru Home Manager

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கிரிஜா ராகவன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :64
பதிப்பு :2
Published on :2005
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Out of Stock
Add to Alert List

என் இனிய வாழ்க்கைப் பயணத்தில் ஒரு அருமையான மைக்கல் இந்தப்புத்தகம். என்னுடைய முதல் புத்தகம். பலரும் என்னைக்
கேட்டிருக்கிறார்கள் நீங்கள் ஏன் இன்னும் புத்தகம் எதுவும் எழுதவில்லை. என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள் நீங்களே செலவழித்து புத்தகம் வெளியிடலாமே என்று.என் மனதிற்குள் ஒரு எண்ணம் புத்தகமாக வெளியாகும் தகுதியை என் எழுத்துதானே அடைய வேண்டும். ஒரு பதிப்பகத்தார்  முன் வந்து என் படைப்பை வெளியிடும் போது தான் என் எழுத்து அங்கீகாரம் பெறும் என்று  காத்திருந்தேன். கற்பகம் புத்தகாலயம் நிறுவனத்தினர் அந்த அங்கீகாரத்தை எனக்கு அளித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவர்களுக்கு நான் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். என்னைப் பெற்றதில் பெருமைப்படும் என்பெற்றோருக்கும், தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் என்னுள் விதைத்து மறைந்த என் கணவருக்கும், நல்ல தாய் என்ற மெருமையை ஈட்டித்தந்த என் அன்பு மகனுக்கும் இந்த நூலை காணிக்கையாக்குகிறேன்.

                                                                                                                                      -கிரிஜா ராகவன்.