book

வள்ளுவம் வழங்கிய வாழ்வியல் நெறி

Valluvam vazhnkiya vaazhviyal neri

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஞானதேவ பாரதி சுவாமிகள்
பதிப்பகம் :கீதம் பப்ளிகேசன்
Publisher :Geetham Publication
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

வள்ளுவம் வழங்கிய வாழ்வியல் நெறி என்ற இந்த ஞான நுல் உங்கள் கைகளில் தவழ்வதே நாம் பெறும் பேறு. ஈரடியில் உள்ள குறள்தானே என்று படிக்கின்ற காலத்தில் எல்லா மாணவமணிகளும் எண்ணுவது வழக்கம். அதை நமக்குப் படிப்பிக்கின்ற ஆசிரியர்களும் அப்படித்தான் ரொம்பச் சுலபமான வடிவத்தில் இலக்கண உரையும் பொருளும் சொல்லித் தந்து எப்படியாவது படிக்க வைப்பார்கள். மிகவும் எளிமையானதுதான் எப்போதும் மிக ஆழ்ந்த தன்மையுடையதாக இருக்கும். நமது பார்வையின் வீச்சு அப்போதைக்கு ஏற்ற அறிவின்படி இன்னும் எளிமைப்படுத்த இயலுமா? என்ற எண்ணத்திலேயே இருக்கும். ஆனால்.. உண்மையில் அந்த எளிமையில் வெறும் வார்த்தைகளே இருக்கும். அர்த்தமும் வாழ்வியலும் இருக்குமா என்றால்.. அது கேள்விக்குறிதான்! திருவள்ளுவரை நமது தாத்தா என்று கொண்டாடுவதில் இருக்கின்ற அக்கறை அவரின் கருத்துச்செறிவான நுட்பமான அந்தக் குறளின் தன்மையில் நமக்கு இருப்பதில்லை. அதற்குப் போதிய அறிவும் நம்மிடம் இல்லை. ஞான நுலுக்கு ஓர் ஞானியே உரைதேட இயலும் என்பதற்கிணங்க இந்த இரு அதிகாரங்களுக்கு மட்டுமே இந்த ஞானி உரைகண்டிருக்கின்றார். வெறும்உரையல்ல.. இது அவரின் ஞானத்தேடலில் விளைந்த முத்து. சாமி என்று அன்போடு வெகுசனமக்களால் அழைக்கப்பட்டாலும் இன்னும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டே இருக்க முயலும் தவயோகியின் தவவேள்வியில் முழங்கிய கீதம் இது. இதைத் தெளிவுடன் புரிந்துகொள்ள நமக்கு அவசியம் ஞானத்தேடல் இருந்தாலன்றி நெருங்கிப் படிக்க இயலாது. விட்டகுறை தொட்டகுறை மாதிரி இருப்பவர்களுக்கு இந்த நுல் பேருதவிசெய்யும் என்பதில் ஐயமில்லை. ஞானத்தின் வடிவாய் வள்ளுவம் மிளிர்வதை இதுநாள் வரை இந்தக் கோணத்தில் தமிழுலகம் கண்டதில்லை. ஞான உரைவீச்சு அவருடைய தவவலிமையால் இந்நுலினை அச்சிட எமக்கு உறுதுணையாக இருந்த தம்பிகள் ச.கார்த்திகேயன், த.பரமேஸ்வரன் இருவருக்கும் நன்றி என்று சொல்லி பிரித்து உறவு சொல்ல விரும்பவில்லை. வெறும் சம்பிரதாயமாக அணிந்துரை வழங்காது உண்மையின் உரைகல்லாய் சைவத்தின் மேன்மை விளங்க தன் வாழ்நாளைப் பணித்திருக்கும் எங்களது முனைவர் ஐயா செந்தமிழ்வாரிதி இரா.செல்வக்கணபதி அவர்களது அணிந்துரைப் பதிவு இந்நுலில் மகுடம் சேர்த்திருக்கின்றது. வள்ளுவத்தின் ஞானரசத்தினைப் பருக இருக்கும் உங்களை வாழ்த்தி தவயோகியாரின் திருவடிக்கமலங்களை ஏத்தி வணங்கி மகிழும்..