book

இந்தியாவில் விவசாயிகளின் பேரெழுச்சி

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். நல்லகண்ணு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :87
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788123421698
Add to Cart

நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வேளாண், தொழில், சேவை என்று அனைத்துத் துறைகளிலும் உற்பத்தியும் உற்பத்திசக்திகளும் அதிகரித்துள்ளன. பல புதிய, அதி நவீன தொழில் நுட்பங்கள் களப்பயன்பாட்டில் உள்ளன. 1950களில் ஆண்டுக்கு சுமார் 5 – 5.5 கோடி டன் என்று இருந்த ஆண்டு உணவு தானிய உற்பத்தி இப்பொழுது 27 கோடி டன்னையும் தாண்டியுள்ளது. வேளாண் உற்பத்தியில் இயந்திரங்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. பல நவீன தொழில்கள் அறிமுகமாகியுள்ளன. விண்வெளியில் செயற்கை கோள்களை செலுத்தும் திறன் இந்தியாவிற்கு உள்ளது. அணுகுண்டு உற்பத்தி முதல் அறுவை சிகிச்சைத்துறை வரை பரந்துபட்ட வளர்ச்சி நிகழ்ந்துள்ளது. எனினும், மறுபுறம் சாதாரண உழைப்பாளி மக்கள் வாழ்வில் துயரங்கள் தொடர்கின்றன. கிராமங்களில் நவீன வேளாண்மை பரவியுள்ள போதிலும் பெரும்பான்மையான விவசாயிகளுக்கு இதனால் குறிப்பிடத்தக்க பயன் இல்லை. கிராமப்புறங்களில்  நிலம் இல்லாத குடும்பங்களின் விகிதம் பெரிதும் கூடியுள்ளது. இப்போக்குகளால் உடல் உழைப்பை நம்பி வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இவர்களுக்கும் சரி, படித்தவர்களுக்கும் சரி, கிராமப்புற பொருளாதாரத்தில் வேலை வாய்ப்புகள் மிகவும் குறைவு. நகரங்களில் நிகழ்ந்துவரும் தொழில் மற்றும் சேவை துறை வளர்ச்சியும் வேலை வாய்ப்புகளை பெருக்கவில்லை. இருபது ஆண்டுகளாக மேலும் மேலும் தீவிரம் அடைந்துவரும் விவசாய நெருக்கடியும் பெருமளவிலான வேலை இன்மையும் தான் இன்று மக்கள் சந்திக்கும் பொருளாதார சூழலின் மிக முக்கிய அம்சங்கள்.. நிலமை கடந்த நான்கு ஆண்டுகளில் பெரிதும் மோசமாகியுள்ளது. இக்கட்டுரையில் இன்றைய நிலமைக்கான காரணங்கள் எவை என்று பார்ப்போம்.