book

பணமதிப்பு நீக்கம்

Panamathippu Neekkam

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஷ்யாம் சேகர், தேவராஜ் பெரியதம்பி
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :78
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788184937091
Add to Cart

நாம் இத்தனை காலம் பயன்படுத்திவந்த ரூபாய் 500, 1000 தாள்கள் செல்லாது என்று நரேந்திர மோதி அரசு அறிவிக்கவேண்டிய கட்டாயம் என்ன? மோதி எதிர்பார்ப்பதைப்போல் இந்தப் பணமதிப்பு நீக்கத்தால் தீவிரவாதம் ஒழியுமா? ஊழல் தடுக்கப்படுமா? கருப்புப் பணம், போதைப்பொருள் கடத்தல் மறையுமா? ஹவாலா முடங்குமா?

ஆம், இந்த நான்குமே சாத்தியம்தான் என்று ஒரு சாரார் சத்தியம் செய்கின்றனர். இதில் எதுவுமே நடக்காது, சிக்கல் அதிகரிப்பதுதான் நடக்கும் என்று இன்னொரு சாரார் சாதிக்கின்றனர். இரண்டில் எது நிஜம்?

கண்மூடித்தனமான எதிர்ப்பையும் ஆதரவையும் கைவிட்டுவிட்டு கள யதார்த்தத்தை விரிவான பொருளாதாரப் பின்னணியில் பொருத்தி நடுநிலையோடு ஆராய்ந்தால்தான் உண்மை புலப்படும். அதற்குச் சில அடிப்படைக் கேள்விகளை நாம் எழுப்பியாகவேண்டும்.

கருப்புப் பணம் எப்படி உருவாகிறது? அது இந்தியாவின் பொருளாதாரத்தை எந்த அளவுக்குப் பாதிக்கிறது? இதைத் தடுக்க இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்னென்ன? அவை தோல்வி அடைந்தது ஏன்? பணமதிப்பு நீக்கத்தால் மட்டும் நிலைமையை மாற்றி அமைத்துவிடமுடியுமா? டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மாறும்படி அரசு நம்மைக் கேட்டுக்கொள்வது ஏன்? இந்தியா போன்ற நாட்டில் அது சாத்தியமா?

பணமதிப்பு நீக்கம் இதுவரை சாதித்திருப்பது என்ன என்பதை ஆராயும் இந்தப் புத்தகம் மேற்படி கேள்விகள் அனைத்துக்கும் எளிமையாக விடையளிக்கிறது. மேலும், கருப்புப் பணத்தை ஒழிக்க அரசும் நாமும் இனி என்னென்ன செய்யவேண்டும் என்பதையும் படிப்படியாக விவாதிக்கிறது. பணமதிப்பு நீக்கத்தை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் இருவரும் இந்நூலை முன்வைத்து தெளிவுபெறவும் விவாதிக்கவும் முடியும்.