book

அலை ஓசை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

Alai Oosai

₹400+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்கி
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :800
பதிப்பு :8
Published on :2016
குறிச்சொற்கள் :சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்
Out of Stock
Add to Alert List

முதலில் இந்தக் கதை ‘கல்கி’ பத்திரிக்கையில் தொடர்ந்து வெளியாகி வந்தது. பத்திரிகையில் கதை முடிந்த பிறகு இதைப் புத்தக வடிவில் கொண்டு வருவது உசிதமாயிருக்குமா என்று போராட்டம் மனதிற்குள் நிகழ்ந்தது. அதைத் தீர்த்துக் கொள்வதற்காக ஒரு தடவை அடியிலிருந்து படித்துப் பார்த்தேன். நண்பரின் கேள்விக்கு விடை கிடைத்தது. நான் எழுதிய நூல்களுக்குள்ளே ஏதாவது ஒன்று ஐம்பது அல்லது நூறு வருஷம் நிலைத்து நிற்கத் தகுதியுடையதென்றால், அது ‘அலை ஓசை’தான் என்ற எண்ணம் படிக்கும்போதே உள்ளத்தில் தானாக உதயமாயிற்று. புத்தகம் பதிப்பிக்கப்பட்டபோது மீண்டும் அச்சுப் பிழை பார்ப்பதற்காகப் படிக்கும்படி நேர்ந்தது. முன்னால் தோன்றிய எண்ணம் உறுதிப்பட்டது. அலை ஓசையை நான் எழுதியதாகவே எண்ணக்கூடவில்லை. லலிதாவும் சீதாவும் தாரிணியும் சூரியாவும் சௌந்தரராகவனும் பட்டாபிராமனும் சேர்ந்து பேசிக்கொண்டு அவரவர்களுடைய அந்தரங்க ஆசாபாசங்களையும் உள்ளக் கிளர்ச்சிகளையும் வெளியிட்டு ‘அலை ஓசை’யை எழுதியிருக்கிறார்கள். அவர்கள் கற்பனை செய்யப்பட்ட பாத்திரங்கள் என்றே என்னால் எண்ண முடியவில்லை. நம்மைப்போலப் பிறந்து வளர்ந்து வாழ்க்கையின் இன்ப துன்பங்களை அனுபவித்தவர்களாகவே தோன்றினார்கள். பாவம்! சீதா மட்டும் அன்னை கஸ்தூரிபாவைத் தேடிக்கொண்டு போய்விட்டாள். மற்றவர்கள் இன்னமும் ஜீவியவந்தர்களாகவே இருக்கிறார்கள். அவர்களை மறுபடியும் எப்போது எங்கே காணப் போகிறேனோ, தெரியவில்லை. ஆம்; இந்தக் கதையைக் கதாபாத்திரங்களேதான் எழுதியிருக்கிறார்கள். ஆசிரியன் செய்திருப்பதெல்லாம் பதினெட்டு வருஷத்து இந்திய தேசிய இயக்கத்தின் வரலாற்றை இந்தக் கதைக்குப் பின்னணியாக அமைத்துக் கொடுத்திருப்பதுதான். 1930-ம் ஆண்டிலிருந்து 1947-ம் ஆண்டுவரையில் நமது தாய்த்திருநாட்டின் சரித்திரத்தில் பல அற்புத சம்பவங்கள் நிகழ்ந்தன. காந்தி மகாத்மாவினுடைய ஆத்மசக்தி கோடானு கோடி மக்களின் உள்ளங்களில் ஆட்சி புரிந்தது. மக்களின் வெளி வாழ்க்கையிலும் உள்ளப் போக்கிலும் எத்தனை எத்தனையோ புரட்சிகள் நடந்தன. அவையெல்லாம் ‘அலை ஓசை’க்குப் பின்னணி சங்கீதமாகத் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதை நேயர்கள் இந்நூலில் காண்பார்கள்