book

ஓநாய் குலச்சின்னம்

Onaai Kulachinnam

₹500
எழுத்தாளர் :C. மோகன்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :672
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

தமிழகத்தில் இயற்கை வளங்கள் சூறையாடப்படும் இந்தச் சமயத்தில் “ஓநாய் குலச்சின்னம்” நாவல் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டிருப்பது ஓர் அரசியல் செயல்பாடாகும். மனிதன் பேய்மழையையும், பனிப்புயலையும் உண்டாக்கும் ஆற்றலை இந்த நூற்றாண்டின் வழியே கண்டுபிடித்ததைத் தவிர வேறு என்ன சாதித்திருக்கிறான் என்ற கேள்வியை இந்த நாவல் நம்முன்னே வைக்கிறது. அனைத்து வளங்களையும் மட்டு மீறிப் பயன்படுத்தும் பெரு நகரங்களைக் கட்டுப்படுத்த வழிவகை செய்யாமல் மேலும் மேலும் நகரங்கள் உப்பிப் பெருத்துக்கொண்டே செல்கின்றன. இதற்காகக் கையகப்படுத்தப்படும் எல்லா நிலங்களிலும் பூர்வகுடிகள் இருக்கிறார்கள். அவர்கள் மெளனிக்கப்படுகிறார்கள். அந்நியர்கள் ஒரு நிலத்தைக் கையகப்படுத்துவது என்பது எவ்வளவு புரிதலின்மையோடு வழிநடத்தப்படும் என்பது ஓநாய் குலச்சின்னம் நாவலில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மங்கோலிய நாடோடிகள் ஓநாயின் இயல்புகளைக் கொண்டவர்கள். அதன் போர் வியூகங்களைக் கற்றுக்கொண்டவர்கள். அதனால்தான் அவர்களால் சீனர்களை நூறு வருடங்களுக்கும் மேல் ஆள முடிந்தது. ஓநாயின் குணத்திற்கு மிகப் பெரிய சான்றாக வரலாறு இருப்பதை நாவல் சொல்கிறது. நாவலில் உச்சமாக, பீஜிங்கிலி ருந்து வந்த மனிதன் ஒரு ஓநாயை அதன் சிறு வயது முதல் எடுத்து வளர்க்க முயன்று தோற்றுப்போகும் பகுதி இருக்கிறது. ஓநாய்களிடமிருந்து தனித்து வைக்கப்பட்டிருந்த அது தனது ஊளையை ஆன்மாவிலிருந்து மீட்டெடுக்கும் கணங்களைப் படைப்பதன் மூலம் எழுத்தின் உச்சபட்ச சாத்தியங்களை ஜியாங் ரோங் செய்திருக்கிறார். இவ்வளவு சிறப்புகளையும் வெகு நேர்த்தியாகத் தமிழில் கிடைக்கும்படி செய்த சி. மோகனின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. 2015ம் ஆண்டில் வெளியான சீன மொழித் திரைப்படம் Wolf Totem (Chinese: 狼图腾) இந்நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகும். ஜீன் ஜாக் ஆனோடு (Jean-Jacques Annaud) என்ற பிரெஞ்சுத் திரைப்பட இயக்குனர் இதனை இயக்கியுள்ளார்.