book

கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம்

Konjam Amutham konjam Visham

₹194.75₹205 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சத்குரு ஜக்கி வாசுதேவ்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :272
பதிப்பு :10
Published on :2016
ISBN :9788184761344
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, கற்பனை, சிந்தனை
Add to Cart

'எப்போதும் ஆனந்தத்தோடு பணியாற்று; என்றும் அமைதி கிடைக்கும்!' என்பதுதான் சத்குரு ஜக்கி வாசுதேவின் தாரக மந்திரம். அதேநேரத்தில், 'வெற்றியையே நினைத்து உழைத்தால், அது கிடைக்குமா, கிடைக்காதா என்ற சந்தேகத்தில்- படபடப்பு, அச்சம், கவலை, மன உளைச்சல் என்று ஏராள பிசாசுகள் உங்கள் மீது வந்து ஏறிக்கொள்ளும். இலக்கின் மீது ஒரு கண்ணைப் பதித்துக்கொண்டால், மிச்சமிருக்கும் ஒரு கண்ணை வைத்துக்கொண்டு எவ்வளவு தூரம் செயலாற்ற முடியும்? செய்ய வேண்டியதை இரண்டு கண்களையும் பயன்படுத்தி முழுமையாகச் செய்யுங்கள். வெற்றி இலக்கை சுலபமாகத் தொட்டுவிட முடியும்' என்று வழிகாட்டுகிறார் சத்குரு. ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் வாழ்க்கை பற்றியும், தங்களுக்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் பல கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. அந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைத்தால் தங்கள் வாழ்வு அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறார்கள். அப்படிப்பட்ட அன்பர்களுக்கு 'கொஞ்சம் அமுதம்... கொஞ்சம் விஷம்' நூலில் அற்புதமான விளக்கங்களை அளித்து மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறார் சத்குரு ஜக்கி வாசுதேவ். அதோடு, 'எனக்குத் தெரியாது' என்று நீங்கள் ஆழமாக ஒப்புக்கொள்ளும் போதுதான் தேடல் சாத்தியமாகிறது. 'எனக்குத் தெரியாது' என்ற அந்த வெற்றிடம் உங்களிடம் உருவாகிவிட்டால், அங்கு நான் வெளிப்படுவேன். வேறெங்கும் என்னைத் தேடத் தேவையில்லை' என்று அன்பர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துகிறார். ஆனந்த விகடனில் வெளிவந்த சத்குரு ஜக்கி வாசுதேவின் அத்தனைக்கும் ஆசைப்படு', 'உனக்காகவே ஒரு ரகசியம்' வெற்றித் தொடர்கள் வரிசையில் 'கொஞ்சம் அமுதம்... கொஞ்சம் விஷம்' தொடர் வெளிவந்து பலருக்கு ஆனந்தமான வாழ்க்கைக்கு வழிகாட்டியது. எழுத்தாளர்கள் 'சுபா'வின் எழுத்து நடையில் எளிய மொழியில் இந்தத் தொடர் வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 'இந்தத் தொடரைத் தொகுத்து ஒரே புத்தகமாக வெளியிடுவீர்களா?' என்று பல வாசகர்கள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அவர்களின் ஆதங்கத்தைப் போக்கும் வகையில் இந்தத் தொடரும் புத்தக வடிவமாக உரு பெற்றிருக்கிறது. மகிழ்ச்சி குறையாத மனித வாழ்க்கைக்கு சத்குரு வழி சொல்கிறார். வாருங்கள் அவர் வழி காட்டுதலில் ஆனந்தத்தை அடைவோம்!